ETV Bharat / entertainment

கமலுக்கு அடுத்து ரியோ ராஜ் தான்; கவனம் ஈர்க்கும் 'ஜோ' படம் - ஜோ

எஸ். ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஜோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

கமலுக்கு அடுத்து ரியோ ராஜ் தான்; கவனம் ஈர்த்த ஜோ படம்

author img

By

Published : Jan 24, 2023, 7:49 PM IST

சென்னை: நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்கக் கூடிய 'ஜோ' திரைப்படத்தின் டைட்டில் டீஸர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரியோ ராஜின் வியத்தகு தோற்ற மாற்றம் மற்றும் ஸ்கிரீன் ப்ரசன்ஸ், இயக்குநர் ஹரிஹரன் ராமின் திறமை, 'பேச்சுலர்' படப்புகழ் சித்து குமாரின் பின்னணி இசை, கண்ணைக் கவரும் விஷூவல் என இவை அனைத்தும் படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடைந்தது. குறுகிய காலத்திற்குள் படம் முடிவடைந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படத்தின் டப்பிங்கை படக்குழுவினர் நேற்று எளிமையாக பூஜையுடன் துவங்கியுள்ளனர்.

ஜோ படத்தின் டப்பிங் பூஜையுடன் துவங்கியது

ஃபீல் குட் லவ் படமாக உருவாகியுள்ள 'ஜோ' திரைப்படத்தை டாக்டர். D. அருளானந்தின் விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்து இருக்கிறது. 17 வயதில் இருந்து 27 வயது வரையிலான இளைஞன் ஒருவனின் காதல் கதையை இந்தப் படம் கூற இருக்கிறது. சென்னை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் என வெவ்வேறு இடங்களில் இது படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' படத்திற்கு அடுத்து தமிழ்ப்படமான 'ஜோ' மட்டும்தான், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 'முதலமட' ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சந்தானத்தின் "வடக்குப்பட்டி ராமசாமி" புதிய அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.