நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பண்முகத் திறமை கொண்டவர் ராஜ் கிரண். இவருக்கு ஜீனத் பிரியா என்ற மகளும் நயினார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜீனத் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஷ்ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முனீஷ்ராஜா நாதஸ்வரம் என்ற சின்னத்திரை நாடகத்தில் நடித்துள்ளார்.
மேலும், சில நாடகங்களில் நடித்துள்ளவர். அதுமட்டுமின்றி நடிகர் சண்முக ராஜாவின் சகோதரரும் கூட. முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருவரும் காத்திருந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு ராஜ் கிரண் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பவே இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து இருவரும் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர். அதில் இருவரும் காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். முறைப்படி பத்திரிகை அடித்து உங்களை அழைக்கலாம் என்று இருந்தோம். ஆனால் அதற்குள் செய்திகளில் தவறாக தகவல்கள் பரவி வருகிறது. கூடிய விரைவில் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இதுவரை எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இதற்கு நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் நீண்ட நெடிய ஓர் விளக்கத்தை அளித்துள்ளார். அதில், தற்போது திருமணம் செய்திருப்பது தனது மகளே இல்லை என்றும், அது தனது வளர்ப்பு மகள் என்றும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். மேலும், தனது வளர்ப்பு மகளை தற்போது திருமணம் செய்திருக்கும் சீரியல் நடிகர் பணத்திற்காகத் தான் இதை செய்ததாகவும், இனி அவர்கள் தன் பெயரை எங்கு பயன்படுத்தினாலும் அதற்கு தான் பொறுப்பல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: Surya 42: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி