ETV Bharat / entertainment

20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் "பாபா" - ஏஆர் ரஹ்மான்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பாபா" திரைப்படம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்ட இப்படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

Actor
Actor
author img

By

Published : Nov 22, 2022, 5:33 PM IST

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "பாபா". இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவதாக பாபா என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன், தயாரித்தும் இருந்தார், ரஜினிகாந்த்.

மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்திருந்தார். கவுண்டமணி, டெல்லி கணேஷ், ரியாஸ் கான், சுஜாதா, எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்டப் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.

மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியானபோது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடி காட்டும் 'பாபா முத்திரை', குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. அதேநேரம் பொருளாதார ரீதியாக இப்படம் தோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில், பாபா திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் மறுதிரையிடலுக்குத் தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில், இப்படம் புதிதாக படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு, டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

'மாயா மாயா ', 'சக்தி கொடு', 'கிச்சு கிச்சு' என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும், புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு, டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:கடவுள் அருள் இருந்தால் அஜித், விஜய்யை இயக்குவேன் - எஸ்.ஜே.சூர்யா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.