சென்னை: பிரபல நடிகை தேவையானியின் சகோதரரும்,பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர், நடிகர் நகுல். ஸ்ருதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பல முறை அனுப்பப்படும் ஆபாச வீடியோக்கள்: நகுல் மற்றும் ஸ்ருதி ஜோடி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளையிடுவதன் மூலமும் பிரபலமான ஜோடிகளாக இருந்து வருகின்றனர் . குறிப்பாக நகுல் மற்றும் ஸ்ருதி ’வாட்டர் பெர்த்’ என்ற முறையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், நகுல் மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆபாசமாக வீடியோக்கள் மற்றும் கருத்துகளை அனுப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். முதல்முறை இல்லாமல் பல முறை இதுபோன்று ஆபாச வீடியோக்களும் கருத்துகளையும் அனுப்பி தொந்தரவு செய்வதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கத்தைப் பற்றி எப்போதும் தவறான கருத்துகளைப் பதிவிடுகின்றனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்படும் பல பெண்கள்: அதுவும் நவீன ஆடைகளை அணியும் பெண்களுக்கு இது போன்று ஆபாச வீடியோவை ஆண்கள் அனுப்பலாம் என எப்படி நினைக்கிறார்கள் எனக்கேள்வி எழுப்பினார். தன்னைப் போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இது போன்ற பதிவுகளைத் தவிர்த்து சமூக வலைதளப் பக்கத்தில் புகார் அளித்ததன் மூலம் அந்தப் பக்கத்தை பிளாக் செய்வதே தொடர்ந்து செய்து வருவதாகவும், இருப்பினும் தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் வருவதாக ஸ்ருதி நகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கடுமையான விதிகள் கொண்டுவரப்படும்வரை, இது போன்ற விஷயங்களில் மாற்றம் ஏற்படாது எனக் கருத்து தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் அளித்தும், காவல் துறையில் எந்த வித நடவடிக்கைகளும் இல்லை எனத்தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் பயப்படுவதாகவும் , புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க நினைப்பவர்கள் சோர்வடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் ’Pan India’ படங்களின் ஆதிக்கம்..! அழிகிறதா தமிழ் சினிமா..?