ETV Bharat / entertainment

நடிகர் மாரிமுத்து மறைவு - திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி! - ethirneechal

actor marimuthu death: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 2:58 PM IST

நடிகர் மாரிமுத்து மறைவு

சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இன்று காலை எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பணிகளில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் பணியாற்றியவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாரிமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நடிகர் மாரிமுத்து மறைவு
நடிகர் மாரிமுத்து மறைவு

மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்து தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், அகிலன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்த பின்னர் ராஜ் கிரண் இயக்கிய அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசா தான் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பின் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களான மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரது படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து மறைவு
நடிகர் மாரிமுத்து மறைவு

குஷி, மன்மதன் ஆகிய படங்கள் இவர் பணியாற்றிய குறிப்பிடத்தக்க படங்களாகும். கடந்த 2008இல் வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரசன்னா கதாநாயகனாக நடித்தார். மாரிமுத்துவை வெள்ளித்திரையில் இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு நிமிர்ந்து நில், கொம்பன், முதல் விக்ரம் வரை பல படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கியிருப்பார். இவர் கடைசியாக நடித்து வெளியான படம் ஜெயிலர்.

நடிகர் மாரிமுத்து மறைவு
நடிகர் மாரிமுத்து மறைவு

சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் மாரிமுத்து. ஆதி குணசேகரன் என எதிர்மறை கதாபாத்திரத்தில் மாரிமுத்து பேசும் ’இந்தாம்மா... ஏய்’ என்கிற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இவரது மறைவு திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் மாரிமுத்து மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் வெளியிட்ட வீடியோவில் “ நடிகர் மாரிமுத்து மறைந்தது அதிர்ச்சி தருகிறது. அவருடன் ஜீவா படத்தில் பணிபுரிந்தேன். மாரிமுத்து அற்புதமான மனிதர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார். கவிஞர் வைரமுத்து மாரிமுத்து மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சரத்குமார், இயக்குநர் வசந்த், ரோபோ சங்கர், நடிகர் ராஜேஷ், லிவிங்ஸ்டன், நடிகர் புகழ், எதிர்நீச்சல் சீரியல் குழு உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: Raveendran Arrest: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது! ரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.