சென்னை: பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில், கடந்த 2017ஆம் வெளியான படம் 'அறம்' இப்படத்தை இயக்கியதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குநராக அங்கீகாரம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். அந்த படம் மக்களுக்குச் சொன்ன உணர்வுப் பூர்வமான கதை, இவருக்கும் நயன்தாராவுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றப் போராடும் மாவட்ட ஆட்சியர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நயன்தாராவின் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இப்படம் பல்வேறு இடங்களில் நல்ல பாராட்டுக்களைக் குவித்தது.
அதனைத் தொடர்ந்து, 'மனுஷி' என்ற படத்தைக் கோபி நயினார் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகின. அந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக வெளியான தகவலைத் தவிர்த்து வேறுதகவல்கள் வெளியாக வில்லை. இந்நிலையில் இயக்குநர் கோபி நயினார் தனது அடுத்த படத்தை நடிகர் ஜெய் நடிப்பில் இயக்கி முடித்துள்ளார். இப்படத்துக்கு 'கருப்பர் நகரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: களைகட்டும் தியேட்டர்கள்.. தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை!
இப்படத்தில் நடிகர்கள் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவும் வட சென்னை மக்களின் வாழ்வை மையமாக உருவாக்கப்பட்ட படம் எனக் கூறப்படுகிறது. இப்படம் எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதிய 'கருப்பர் நகரம்' என்கிற நாவலின் தழுவல் இல்லை என்றும், இது ஒரு மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம் என்றும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. அதனைத் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு வெளியிட்டுள்ளார். மேலும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படம் குறித்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 'அறம்' படம் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநரின் அடுத்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், நடிகர் ஜெய் நடிப்பில், நடிகரும் இயக்குநருமான அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், 'லேபில்' என்ற வெப் சீரிஸ் (இணையத் தொடர்) ஹாஸ்டார் (Hotstar) ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதுவும் வட சென்னையை மக்களின் வாழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">