சென்னை: நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த புதிய சீரிஸுக்கு, திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.
-
அடையாளத்துக்கான ஓர் போராட்டம்! #LabelOnHotstar #Comingsoonhttps://t.co/Lq5HBH7js8…@muthamizh777 @Arunrajakamaraj @TanyaHope_offl @Actor_Mahendran @keeperharish @samCSmusic@dineshkrishnanb @meevinn @sureshmilitary @arishkumar_offl @actorsriman @arkentcompany @teamaimpr
— Jai (@Actor_Jai) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அடையாளத்துக்கான ஓர் போராட்டம்! #LabelOnHotstar #Comingsoonhttps://t.co/Lq5HBH7js8…@muthamizh777 @Arunrajakamaraj @TanyaHope_offl @Actor_Mahendran @keeperharish @samCSmusic@dineshkrishnanb @meevinn @sureshmilitary @arishkumar_offl @actorsriman @arkentcompany @teamaimpr
— Jai (@Actor_Jai) October 10, 2023அடையாளத்துக்கான ஓர் போராட்டம்! #LabelOnHotstar #Comingsoonhttps://t.co/Lq5HBH7js8…@muthamizh777 @Arunrajakamaraj @TanyaHope_offl @Actor_Mahendran @keeperharish @samCSmusic@dineshkrishnanb @meevinn @sureshmilitary @arishkumar_offl @actorsriman @arkentcompany @teamaimpr
— Jai (@Actor_Jai) October 10, 2023
ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தில் உருவாகியுள்ள 'லேபில்' சீரிஸில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜின் முதல் வெப் சீரிஸ் 'லேபில்' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இதற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உள்பட 4 பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தற்போது இதன் மோஷன் போஸ்டர் 'அடையாளத்துக்கான ஓர் போராட்டம்' என குறிப்பிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லியோ பட நடனக் கலைஞர்களுக்கான சம்பள விவகாரம்; FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்