ETV Bharat / entertainment

“Arrange மேரேஜ்”க்கு வாய்ப்பில்லை ராஜா! - நடிகர் அசோக் செல்வன்...

author img

By

Published : Nov 11, 2022, 10:01 AM IST

கிராமத்து கதைகளில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ள நடிகர் அசோக் செல்வன், விரைவில் இயக்குனர் பிரவேஷம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

”நித்தம் ஒரு வானம்” பட ரிலீசை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாயகன் அசோக் செல்வன் பல்வேறு ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

"எனக்கு காட்பாதர் என்றால் அது பத்திரிக்கையாளர்களும், மக்களும் தான். சினிமாவுக்குள் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்த எனக்கு உங்களது சப்போர்ட் உதவியாக இருந்தது. அனைத்துக்கும் நன்றி.

சினிமாவிற்கு வந்து 10 வருடம் ஆகிறது. நித்தம் ஒரு வானம் படத்தில் கொங்கு மொழி பேசி நடித்தது அம்மாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. உறவினர்கள், ரசிகர்கள் பாராட்டினார்கள். நான் சென்னையில் தான் வளர்ந்தேன். இந்த கதாபாத்திரம் பண்ண நடிகர் சத்யராஜ் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார்.

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசை. நானும் சரத்குமார் சாரும் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது. சரத்குமார் சார் இந்த வயதிலும் தெழில்பக்தியுடன் இருப்பது வியக்க வைக்கிறது.

திருமணத்தை பற்றி இப்போது யோசிக்கவில்லை. இப்போதுதான் சினிமா கேரியர் தொடங்கியுள்ளது. அரேன்ஜ் மேரேஜ் எல்லாம் எனக்கு செட் ஆகாது. லவ் மேரேஜ் தான். ஓ மை கடவுளே இரண்டாம் பாகம் தற்போதைக்கு சாத்தியமில்லை. ஒரு நடிகனாக எல்லா பரிமாணத்திலும் நடிக்க ஆசை. கிராமத்து கதைகளில் நடிக்க அதிக விருப்பம். அதுபோன்ற கதைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என ஆசை. வெற்றிமாறன் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும், அனிருத் இசையில் நடிக்கவும் விருப்பமுள்ளது. இப்படி ஆசைகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும். சினிமா ரொம்ப பிடிக்கும். படம் இயக்குவேன். ஆனால் அது தற்போது இல்லை.

மன்மத லீலை படத்தில் காமெடி காட்சிகளில் நடத்தது சந்தோஷமாக இருந்தது. பேமிலி ஆடியன்ஸ் ஏன் இப்படத்தில் நடித்தாய் என கேட்டனர். ஆனால் மன்மத லீலை படம் மூலம் புதிய ஆடியன்ஸ் கிடைத்தனர்" என்றார்.

இதையும் படிங்க: நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.