ETV Bharat / entertainment

HBD GV Prakash: வெயிலோடு விளையாடி முதல் அடியாத்தி இது என்ன பீலு வரை.. இசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ் பர்த்டே ஸ்பெஷல்! - ஜிவி பிரகாஷ் குமார் குடும்பம்

இசையமைப்பாளர், நடிகர் என இளைஞர்கள் மத்தியில் இசை நாயகனாக வலம் வரும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 36-வது பிறந்தநாள் சிறப்பு தொகுப்பைக் காணலாம்.

HBD GV Prakash
ஜி.வி பிரகாஷ்
author img

By

Published : Jun 13, 2023, 3:41 PM IST

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியான ஏ.ஆர்.ரெய்கானா மற்றும் பிரபல பின்னணிப் பாடகரான ஜி.வெங்கடேஷன் மகன் ஜி.வி.பிரகாஷ்.1987 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி பிறந்தார். ஜி.வி பிரகாஷ் பிறக்கும் போதே ஒரு இசைக் குடும்பத்தின் வாரிசாகத்தான் பிறந்தார்.

பிறகு அவர்களைப் பார்த்து வளர்ந்ததால் என்னவோ ஜி.வி.பிரகாஷுக்கு சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதனால் சிறுவயதில் இருந்தே இசையை கற்ற ஆரம்பித்துள்ளார். பின் தனக்கு இசைதான் எல்லாமே என முடிவு செய்த காலகட்டத்தில், ஜி.வி 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இசை தொடர்பாக பயில லண்டன் சென்றார்.

பின்னர் தனது இசைப் படிப்பை முடித்து வந்த ஜி.வி பிரகாஷுக்கு என்ன செய்வது என யோசித்த நேரத்தில், தனது தாய் மாமாவான ஏ.ஆர்.ரகுமானின் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான 'ஜென்டில் மேன்' திரைப்படத்தில் பின்னணி பாடகராக பணியாற்றி தனது இசைப் பயணத்தை துவங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜுடன் சில காலம் உதவியாளராக பணியாற்றினார். கிட்டத்தட்ட 26 படங்களுக்கு மேல் உதவியாளராக பணியாற்றி இசையில் உள்ள நுணுக்கங்களை சிறிது சிறிதாக ஒட்டு மொத்தத்தையும் கற்றுக் கொண்டார் ஜி.வி. இவர் உதவியாளராக பணியாற்றிய காலகட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு சலசலப்பு கூட இருந்ததில்லை.

அதனைத் தொடர்ந்து, ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான 'வெயில்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தனது திரையுல இசைப் பயணத்தை தொடர்ந்தார் ஜி.வி.பிரகாஷ். மக்கள் மனதில் அழியா இடம் பெற்ற இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியைக் கண்டது.

அதன் பிறகு 'வெயிலோடு விளையாடி' என துவங்கிய ஜி.வி-யின் வாழ்க்கை இசையோடு விளையாடி தற்போது இளசுகளின் காதல் இசைகளின் நாயகனாக வலம் வருகிறார் என்றே கூறலாம். அதைத் தொடர்ந்து பொல்லாதவன், கிரீடம், சேவல், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் இசையமைத்த ஆடுகளம், சூரரைப் போற்று, அசுரன் உள்ளிட்ட பல தேசிய விருது பெற்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தலைமுறை மத்தியில் அழியா இசையில் ஜி.வியின் இசையும் ஒன்று எனலாம். சில பாடல்கள் இவர்தான் இசையமைத்தாரா என்ற சந்தேகங்கள் கூட ரசிகர் மத்தியில் வந்துள்ளது அவ்வளவு காதல் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசைக்கு நடுவில் நடிப்பிலும் ஆர்வம் வந்த காரணத்தால் குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என பல திரைப்படங்களில் தானாகவே சென்று சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். மேலும் விஜய் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ திரைப்படத்தில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடலுக்கு நடனம் ஆடுபவராகவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

இவருக்கெல்லாம் இசையமைக்க மட்டும் தான் வரும் நடிப்பு, ரொமான்ஸ் என எதுவும் வாராது என்று பலர் தங்களது கருத்துக்களை பகீரங்கமாக பகிர்ந்தனர். ஆனால் அதற்கெல்லாம் துவண்டு போகாத ஜி.வி.பிரகாஷ் உறுதியுடன் தனது பயணத்தை துவங்கினார். இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு கர்நாடக பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு தனக்கு நடிப்பு வராது என கூறியவர்களுக்கு பதிலடி தரும்படி, 2015-ல் இவர் நடித்த திரைப்படம் தான் 'டார்லிங்'. காமெடி, த்ரில்லர், ரொமான்ஸ் என அனைத்தும் நிறைந்த இப்படத்தின் மூலம் களமிறங்கி தன்னைப்பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாள் எனக் கூறுவார்கள், அதுபோல, ஜி.வி.பிரகாஷ் விமர்சனங்களால் தளர்ந்து போன நேரத்தில் அவருடன் உறுதுணையாக இருந்தது அவரது மனைவி சைந்தவி தான்.

டார்லிங் படத்தின் வெற்றிக்குப் பிறகு பென்சில், த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு, செம்ம உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். என்னதான் அதிக படம் நடிக்க வாய்ப்புக் கிடைத்தாலும் அவற்றில் சில படங்கள் எதிர்பாராத அளவிற்கு தோல்வியைத் தழுவியது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனாலும், சிவப்பு மஞ்சள் பச்சை, பேட்சிலர், நாச்சியார் போன்ற மையக் கருத்துள்ள படங்களும் மக்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்ட வெற்றிப்படங்களாகத் தான் அமைந்தது.

இப்படி சினிமா துறையில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பலவகையான வெற்றி வாகை சூடி வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், பல சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார் என்றே கூறலாம். அதாவது, நெடுவாசல், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் மற்றும் நீட் போன்ற பலவற்றுக்கு சமூக அக்கறையுடன் குரல் கொடுத்தவர்.

இந்நிலையில், அரசியலில் சில நாட்களாக அமைச்சர் அமித்ஷா பேச்சு தான் டிரெண்டாக இருக்கிறது. அதற்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் என்ன தொடர்பு எனப்பார்க்கின்றீர்களா. அதாவது 2 நாட்களுக்கு முன் நடிகர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 24 பிரபலங்களை ஒரு நட்சத்திர விடுதிக்கு அழைத்து விருந்து அளித்து பேசியுள்ளார். மேலும் சில காலங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும் டெல்லியில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை ஜி.வி.பிரகாஷூம் பாஜகவில் சேரப்போகிறாரா?... என பலரது மத்தியில் சில சர்ச்சைகள் அரசல் புரசலான கருத்துக்கள் வலம் வருகிறது. அது ஒரு புறம் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஒரு இசை இளவரசனாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் தற்போது ஜூன் 13 ஆம் தேதியான இன்று தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இதையும் படிங்க: khatija rahman: இசையமைப்பாளராக களமிறங்கு ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.