ETV Bharat / entertainment

"ஆக்‌ஷன் கிங் புதிய அவதாரம்" - மார்டின் படத்துக்கு கதை எழுதிய அர்ஜூன் - மார்டின் படத்தின் டீசருக்கு வரவேற்பு

நடிகர் அர்ஜூன் கதாசிரியராக உருவெடுத்துள்ள மார்டின் திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அர்ஜூன் கதை எழுதிய படம்
அர்ஜூன் கதை எழுதிய படம்
author img

By

Published : Feb 26, 2023, 2:53 PM IST

பெங்களூரு: தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். அதிரடி சண்டை காட்சிகள் அதிகம் இடம்பெறும் அவரது படத்துக்கு தனி ரசிகர்கள் உண்டு. நடிகராகவும், இயக்குநராகவும் முத்திரை பதித்த அர்ஜூன், தற்போது கதாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார். கன்னடத்தில் துருவா சார்ஜா நடித்துள்ள மார்டின் திரைப்படத்துக்கு அவர் கதை எழுதியுள்ளார்.

நடிகர் துருவா சார்ஜா, அர்ஜூனின் உறவினர் ஆவார். அவரது நடிப்பில் ஏ.பி.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்டின். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த 23ம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. விழாவில் படத்தின் கதாசிரியர் அர்ஜூன், தயாரிப்பாளர் உதய் மேத்தா, இயக்குநர் ஏ.பி.அர்ஜூன், நாயகன் துருவா சார்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் அர்ஜூன், "இந்த கதையை துருவா சார்ஜாவுக்காக தான் எழுதினேன். கதையை அவரிடம் கூறிய போது சில மாற்றங்களை கூறினார். ரசிகர்களுக்கு சிறப்பான படத்தை கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இந்திய அளவில் இப்படம் பெரும் வெற்றி பெறும்" என கூறினார்.

ஹாலிவுட் படங்களுக்காக நிகராக அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் வெளியாகி இரண்டு நாட்களில் 6.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. விரைவில் மார்டின் திரைப்படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பத்திரிகையாளரிடம் மன்னிப்புக்கேட்ட நடிகை ரித்திகா சிங் - என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.