ETV Bharat / entertainment

Manorama: ஆயிரம் படங்கள் கண்ட அபூர்வ சிந்தாமணி… ஆச்சி மனோரமா பிறந்தநாள் ஸ்பெஷல்! - டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது

1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஆச்சி மனோரமாவின் 86வது பிறந்தநாள் சிறப்பு தொகுப்பை காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 26, 2023, 1:18 PM IST

சென்னை: நடிகை மனோரமா தஞ்சையில் உள்ள மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் கோபிசாந்தா. சிறு வயதில் கோபிசாந்தாவின் தந்தை, அவரது தாயை பிரிந்து சென்றைதை தொடர்ந்து சிறுமியாக இருக்கும் கோபிசாந்தாவுடன், காரைக்குடி பக்கம் கோட்டையூர் அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.

அங்கே பலகாரக் கடை போட்டு தனது மகளை வளர்த்து வந்தார். ஆறாவதுடன் படிப்பு நின்று போக அங்கே உள்ள வீடுகளில் சிறுமி கோபிசாந்தா வேலை செய்தார். அங்கே இவர் ஆடிப்பாடி நடனம் ஆடியது எல்லோருக்கும் பிடித்து போக இவரது நடிப்பு திறமையால் உள்ளூர் நாடகக்குழுவில் மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நடிப்பை கண்டு வியந்து போன எஸ்.எஸ்.ஆர், தன் நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். கவியரசர் கண்ணதாசன், தான் தயாரித்த படத்திலேயே கோபிசாந்தாவை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பிறகு சென்னை வந்த கோபிசாந்தா, மனோரமா என சினிமாவிற்காக பெயர் மாற்றிக் கொண்டார். ஆரம்ப காலங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த மனோரமா, பின்னர் காமெடி வேடங்களில் நடித்து தனக்கென தனியிடம் பிடித்தார். அவரது நடிப்பு அன்றிருந்த முன்னணி நடிகர்களையே ஆட்டம் காண வைத்தது என்றால் மிகையல்ல.

அது மட்டுமின்றி ஐந்து முதல்வர்கள் உடன் நடித்த ஒரே நடிகை என்ற சாதனையும் இவர் வசம் உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர். அது மட்டுமின்றி சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

எந்த நகைச்சுவை நடிகர் உடன் நடித்தாலும் ஜோடி பொருத்தம் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் ரமாமணியாக சிவாஜியுடன் நடிப்பில் போட்டி போட்டவர். 90களில் மனோரமா இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அம்மாவாக, அத்தையாக, அக்காவாக, பாட்டியாக என இவர் நடிக்கும் அத்தனை வேடங்களிலும் தேர்ந்த நடிப்பை‌ வழங்கியிருப்பார்.

சின்னக் கவுண்டர் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதே போன்று நடிகன் படத்தில் இவர் ஏற்று நடித்த வேடம் இன்று வரையிலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக பேசப்படுகிறது. சென்னை பாஷையை அத்தனை எளிமையாக தனது படங்களில் பேசி அசத்தியிருப்பார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வேலைக்காரி கண்ணம்மாவாக அதகளம் செய்திருப்பார்.

நடிப்பு மட்டுமின்றி பாடல்களும் பாடியுள்ளார். ’வா வாத்தியார் என் வூட்டான்ட’ என இவர் பாடிய பாடலை யாராலும் மறக்க முடியாது. ’மெட்ராஸ சுத்திப் பாக்க போறேன்’ ’டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே’ ’முத்துக்குளிக்க வாரீயளா’ என ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது மனோரமாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் இல்லாத வெற்றிடம் தமிழ் சினிமாவில் தற்போது வெகுவாக காண‌ முடிகிறது. இன்று அவர் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆர் தொடங்கி ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்தி, அஜித், விஜய் நான்கு தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார் மனோரமா. காரைக்குடியில் வாழ்ந்ததால் அவரை‌ எல்லோரும் அன்பாக ஆச்சி என்று அழைத்தனர். தனிப்பட்ட வாழ்வில் பல சோகங்களை சுமந்து வந்தாலும் திரையில் நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவர் மனோரமா. அத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரரான மனோரமா ஆச்சிக்கு இன்று 86வது பிறந்தநாளாகும்.

இதையும் படிங்க: HBD Goundamani: கவுண்டமணி பிறந்தநாள் இன்று..! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவுண்டர்ஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.