ETV Bharat / entertainment

இந்தியில் ரீமேக்காகும் "லவ் டுடே" - ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை என்ன? - archana kalpathi new announce love today movie

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்த "லவ் டுடே" திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் ரீமேக்காகும் "லவ் டுடே"
இந்தியில் ரீமேக்காகும் "லவ் டுடே"
author img

By

Published : Feb 21, 2023, 1:56 PM IST

Updated : Feb 21, 2023, 2:39 PM IST

சென்னை: கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் "லவ் டுடே" (love today). இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பிரதீப் ரங்கநாதன் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு இயக்கிய 'ஆப் லாக்' (App lock) என்ற குறும்படத்தையே திரைப்படமாக எடுத்திருந்தார். இன்றைய 2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

ரூ.5 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.70 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. கரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒரு சிறிய படம் 100-வது நாள் வெற்றிவிழா கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த 'லவ் டுடே' படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "மிகவும் மகிழ்ச்சியான செய்தி, 'லவ் டுடே' படம் இந்தி ரீமேக்கில் உருவாகிறது. பான்டோம் பிலிம்ஸ் உடன் இணைந்து லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தை சூப்பர் நடிகர், நடிகையர் மற்றும் குழுவுடன் இணைந்து அதிக ரசிகர்கள் பட்டாளத்துக்கு கொண்டு செல்ல காத்திருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போது ஓடிடியில் உள்ள லவ் டுடே படத்தை இந்தியில் பலரும் பார்த்திருப்பார்கள்.‌ பின்னர் ஏன் பணத்தை வீணாக செலவு செய்கிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை இந்தியில் எடுத்தாலும் பிரதீப் ரங்கநாதன் தான் நடிக்க வேண்டும். இந்தியில் உள்ள‌ வேறு எந்த நடிகர்களும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தமாட்டார்கள் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உலக தாய்மொழி தினம்: 'தமிழ்' என 500 பேருக்கு டாட்டூ வரைந்து உலக சாதனை முயற்சி!

Last Updated : Feb 21, 2023, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.