ஹைதராபாத்: ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்தானா நடிப்பில் உருவாகியுள்ள அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் இன்று (டிசம்பர் 16) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ஜேம்ஸ் கேமரூன் படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இவரது இயக்கத்தில் வெளியான தி டெர்மினேட்டர் (1984), ஏலியன்ஸ் (1986), தி அபிஸ் (1989), ட்ரூ லைஸ் (1994), டைட்டானிக் (1997) படங்கள் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்தவை.
குறிப்பாக, 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் முதல்பாகம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 4,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களை போலவே அதிகாலை ஷோவுடன் அவதார் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'Pandora is Back' உலகெங்கும் நாளை வெளியாகிறது அவதார் 2