ETV Bharat / entertainment

Oppenheimer: உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓபன்ஹெய்மர்.. அப்படி என்ன ஸ்பெஷல்! - ஹாலிவுட் செய்ஹிகள்

உலக புகழ் பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் வரும் ஜூலை 21ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oppenheimer
Oppenheimer
author img

By

Published : Jul 8, 2023, 7:31 PM IST

ஹைதராபாத்: உலக அளவில் புகழ் பெற்ற இயக்குநர்களுள் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan). நோலனின் தனித்துவம் வாய்ந்த படங்கள் உலகெங்கும் பெரும் வறவேற்பை பெறக்கூடியவை. இவருடைய திரைப்படங்கள் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருக்கக்கூடியவை. இவருடைய தனித்துவமான திரைக்கதைக்கு உலகெங்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கிறிஸ்டோபர் நோலன் தனது சிறப்பான திரைக்கதை திறனால், ஐந்து முறை ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், டைடானிக் (Titanic) கதாநாயகன் லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio) நடிப்பில் வெளியான 'இன்ஷெப்சன்' (Inception), 'பேட்மென் பிகின்ஸ்' (Batman Begins) போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியாவில் தனக்கென ரசிகர்களை உருவாகிக் கொண்டார். தான் இயக்கிய 'டென்னட்' (Tenet) என்ற படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பை மும்பையில் எடுக்கப்பட்டது. தனது அடுத்த படமான 'ஓபன்ஹெய்மர்' (Oppenheimer) அறிவிப்பு வந்த உடனே நோலனின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். காரணம் கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படங்களில், மிக பிரமாண்ட காட்சிகளை எந்த வித கிராஃபிக்ஸ் இல்லாமல் படமாக்க கூடியவர்.

அந்த வகையில் ஓபன்ஹெய்மர் படம், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஜெ. ராபர்ட் ஓபன்ஹெய்மர் (J. Robert Oppenheimer) என்பவரின் வாழ்க்கை மற்றும் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை பற்றி படம். இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் ஒரு காட்சி இருப்பதாகவும், அதற்காக உண்மையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து படப்பிடித்தாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஒரு நேர்காணலில் கிறிஸ்டோபர் நோலனிடம் கேட்ட போது, இப்படத்தை பார்க்கும் போது பார்வையாளர்கள் உண்மையில் ஒரு அணுகுண்டு வெடிப்பதின் அனுபவிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். நோனலின் இந்த கூற்று இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

மேலும், கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan), தனது திரைப்படங்களை IMax-ன் பிரத்யேக கேமராவின் மூலம் படம் பிடிப்பார். அதேபோல் இந்த படத்தையும் IMAX-ன் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அசல் அனுபவம் வேண்டுமெனில் IMax திரையரங்குகளில் பார்க்க வேண்டுமென நோலனின் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த மாதம் 21ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி கூட கிராஃபிக்ஸ் செய்யப்படவில்லை என்று இப்படத்தின் தொகுப்பாளர் தெரிவித்துள்ளதாகவும், புலிட்ஸர் விருபேற்ற, 'அமெரிக்கன் ப்ரோமிதியஸ்' (American Prometheus) எனும் புத்தகத்தை தழுவி அமெரிக்க விஞ்ஞானி ஜெ. ராபர்ட் ஓபன்ஹெய்மர் (J. Robert Oppenheimer) என்பவரின் கதையை படமாக்கப்பட்டதாக, அமெரிக்காவின் புகழ் பெற்ற திரைப்படங்கள் சார்ந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

இப்படத்தில், பீக்கி பிளைண்டர்கள் (Peaky Blinders) தொடரில் நடித்த சிலியன் மர்ஃபி (Cillian Murphy), அயன் மென் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி (Robert Downey Jr) மேலும் பல முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் IMax திரையரங்கிற்கான டிக்கட்டுகள் முன்பதிவு துவங்கி கிட்டதட்ட 25,000 டிக்கட்டுகள் முன்பதிவாகியுள்ளது. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் மல்டிபிலக்ஸ் திரையரங்கில் கடந்த திங்கள் கிழமை (ஜூலை 03) முன்பதிவு துவங்கி ஒரு மணி நேரத்தில் 7,000 சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்றைய சினிமா: மாவீரன், கொலை படத்தின் அப்டேட்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.