காங்கிரஸ் கட்சித் தலைவரான ஹர்திக் பட்டேல் மேடையில் நேற்று பேசிக்கொண்டு இருக்கும் போது தாக்கப்பட்டார். இதையடுத்து ஹர்திக்கை தாக்கிய நபரை கைது செய்து விசாரித்ததில், அந்த நபரின் பெயர் தருண் குஜர் என்றும், ஹர்திக்கின் போராட்டங்களால் தன் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஹர்திக் பட்டேல் கூறுகையில், இது பிஜேபி-யின் வேலைதான் என்றும், அக்கட்சியினர் எப்போது வேண்டுமானாலும் தன்னை சுட்டுக் கொல்லக்கூடும், ஆனால் தன் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸின் பொதுச்செயலாளர் சேத்தன் ரனவால் தேர்தல் ஆணையத்திடம் ஹர்திக் பட்டேலுக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார்.