இந்தியா முழுவதிலும் 12 மாநிலங்களில் 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், நடிகர், நடிகைகள் என பலரும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் பரத் சென்னையில் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் எனது ஜனநாயக கடைமையை ஆற்றிவிட்டேன். அதேபோல், மக்கள் அனைவரும் தங்களின் கடைமையை ஆற்றிட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது” என்றார்.