ETV Bharat / elections

நான் ஸ்டாலினின் கொடுக்கு! அன்புமணிக்கு உதயநிதி பதிலடி - உதயநிதி

திருவாரூர்: நான் ஸ்டாலினின் கொடுக்கு தான், இந்த கொடுக்கு கொட்ட கொட்ட வலிக்கும் என திருவாரூர் பரப்புரையில் அன்புமணிக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

நான் ஸ்டாலினின் கொடுக்கு - அன்புமணிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
author img

By

Published : Apr 9, 2019, 6:08 PM IST

மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு திருவாரூர் நகர பகுதியான வாலவாய்க்காலில் திமுக சார்பில் திருவாரூர் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிடும் பூண்டி கலைவாணன், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மக்களவை வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு வாக்கு கேட்டும் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, 'ராகுல் காந்தியின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலின் ஹீரோ. அதற்கு வில்லன் மோடி. ஒரு வில்லன் இருந்தால் இரண்டு கைக்கூலிகள் இருப்பார்கள் அந்த கைக்கூலிகள்தான் ஓபிஎஸ்-இபிஎஸ்.

நான் ஸ்டாலினின் கொடுக்குதான். நான் கொட்ட கொட்ட வலிக்கும். இம்முறை திமுகவை வெற்றிபெறச் செய்தால், மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கருணாநிதி இப்போதும் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூர் சட்டப்பேரவை வேட்பாளர் பூண்டி கலைவாணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

Intro:நான் ஸ்டாலினின் கொடுக்கு தான் இந்த கொடுக்கு கொட்ட கொட்ட வலிக்கிறது அல்லவா என அன்புமணிக்கு திருவாரூர் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி.

Body:நான் ஸ்டாலினின் கொடுக்கு தான் இந்த கொடுக்கு கொட்ட கொட்ட வலிக்கிறது அல்லவா என அன்புமணிக்கு திருவாரூர் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி.

திருவாரூர் நகர பகுதியான வாலவாய்க்காலில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் திமுக சார்பில் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்தும், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு வாக்கு கேட்டு திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சார வருகையின்போது உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது...

ராகுல்காந்தியின் தேர்தல் அறிக்கை இந்தத் தேர்தலின் ஹீரோ என்றும் ஹீரோ இருந்தால் ஒரு வில்லன் இருக்க வேண்டும், அந்த வில்லன் மோடி என்றும், ஒரு வில்லன் இருந்தால் இரண்டு கைக்கூலிகள் இருப்பார்கள் அந்த கைக்கூலிகள் தான் ஓபிஎஸ் இபிஎஸ் என்றார்.

அன்புமணி என்னை ஸ்டாலினின் கொடுக்க என்று கூறி வருகிறார் ஆமாம் நான் ஸ்டாலினின் கொடுக்கு தான். இந்த கொடுக்கு கொட்ட கொட்ட வலிக்குது அல்லவா என பதிலளித்தார்.

நாலு படத்தில் நடித்து விட்டு நான் அரசியல் பேசுவதாக அன்புமணியும்,ராமதாஸும் கூறுகிறார்கள் நான் படத்தில் மட்டுமே நடிக்கிறேன் நீங்கள் மக்களிடத்தில் நடிக்கிறேர்கள்.

பிரச்சார கூட்டத்தில் தொண்டர்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தோம். ஆனால் யாராவது வாக்களித்தீர்களா ? என கேள்வி எழுப்பினார். இம்முறை வெற்றி பெற செய்யுங்கள் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கருணாநிதி இப்போதும் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர்கள் பூண்டி கலைவாணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.