ETV Bharat / elections

வாக்குப்பதிவு இயந்திர ஆயத்தப்பணிகள் தீவிரம்

தமிழ்நாடு: தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் கடலூர், தருமபுரி மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் விவரங்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர், தருமபுரி
author img

By

Published : Apr 10, 2019, 6:22 PM IST

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய விவரங்கைளை பொருத்தும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

election voting mission
தருமபுரியில் ஆயத்தப்பணியில் அதிகாரிகள்

இந்நிலையில், தருமபுரி, கடலூர் மாவட்டங்களில் வேட்பாளர்களின் விவரங்களை பொருத்தும் பணிகள் பாதுகாப்பான முறையில் தொடங்கியது. தருமபுரியில் நடைபெற்ற இப்பணியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார். இந்தப் பணி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 2,623 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார்.

கடலூர்

அதேபோன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் விவரங்களை சேர்க்கும் பணி தொடங்கியது. இதனை சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் துவக்கி வைத்தார்.

10.04.2019
தருமபுரி.

தருமபுரி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள்  நடைபெற்று வருவதாக தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  தர்மபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இன்று (10.04.19) இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள பேலட் யூனிட்டில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டை பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எஸ். மலர்விழி தொடங்கி வைத்தார். 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தது.  மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையிலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியின் முகவர்கள் முன்னிலையிலும்  இந்த அறைகள் திறக்கப்பட்டு அதில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றொரு அறையில் வைக்கப்பட்டு, அங்கு சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

 இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான எஸ். மலர்விழி மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் தேபேந்திர குமார் ஜனா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவரும் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலருமான  மலர்விழி "தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேட்டூர் தொகுதியில் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் 2,623 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள பேலட் யூனிட்டில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு  யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் VVPAT இயந்திரத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 16 வகையான சின்னங்கள் பொருத்தப்பட்டு உறுதிசெய்யப்பட உள்ளது.  மொத்தமுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5% இயந்திரங்களில் ஆயிரம் ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு, அந்த ஓட்டுக்கள் யாருக்கு செல்கிறது என்பதை உறுதி செய்யும் வகையில் கண்ட்ரோல் யூனிட் மற்றும்  VVPAT சரிபார்க்கப்பட உள்ளது. இந்த சரிபார்க்கப்படும் பணிகள் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் நடைபெறும் அவர்களின் ஒப்புதல் கையொப்பமும் பெறப்படும். தொடர்ந்து மூன்று நாட்கள் இப் பணிகள் நடைபெறும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், 12 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான தாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். மேலும் 53 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகளில் நேரடியாக இணையத்தில் வாக்குப்பதிவை ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நுண் பார்வையாளர்கள், மத்திய காவல் படையினர் இந்த வாக்குச்சாவடிகளில் அமர்த்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.