அப்போது அவர் தெரிவித்த முக்கியமான கருத்துகள்:
- ரூ. 32.68 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
- ரூ. 43.54 லட்சம் மதிப்புள்ள மது வகைகள் பறிமுதல்
- ரூ. 294.38 கோடி தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது
- ரூ. 55.55 கோடி வருமானவரித் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கனிமொழி வீட்டில் ரெய்டு குறித்து...
- மாவட்ட ஆட்சியர் செல்ஃபோனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே வருமானவரித் துறை கனிமொழி தங்கியிருந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டது. பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆண்டிபட்டியில் இப்போது வரை சோதனை நடைபெறுகிறது.
வழக்குகள்:
- 4,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுகவாக இருந்தாலும் பணம் பதுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
தேர்தல் குறித்து...
- அனைத்து ஏற்பாடுகள் தயாராக உள்ளது. வாக்கு எந்திரங்கள் இன்று மாலைக்குள் கொண்டு செல்லப்படும்
- தடங்காட்டி கருவி மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது
- கம்பனி படை, காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர்
- நேரலையாக வாக்கு மையங்கள் கண்காணிக்கப்பட உள்ளது
- ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் 1950 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
- 3.5 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பணியில் உள்ளனர்
- காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது
- மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்
- 6 மணிக்கு மேல் கியூவில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்
- 144 தடை உத்தரவுக்கு வாய்ப்பு உள்ளது
- வாக்கு மையங்களில் யாருக்கும் பாதிப்பின்றி ஊடகங்கள் படம் எடுக்கலாம்
- முதல் முறை வாக்காளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 4 லட்சம் பேர் உள்ளனர்.
- மொத்தமாக 4.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.
- பூத் சிலிப்புகளை இம்முறை அலுவலர்கள் மட்டுமே கொடுப்பார்கள். அனைத்துத் தனியார் நிறுவனங்களுக்கும் வாக்குப்பதிவு அன்று விடுமுறை வழங்க வேண்டும். விவி பேடில் வாக்களித்ததற்கு மாறாக சிலிப் வந்தால் அது தொடர்பாக அங்குள்ள அலுவலரிடம் தெரிவிக்கலாம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த இயந்திரங்களை உடனடியாக மாற்ற ஏற்பாடு செய்யப்படும்.