ETV Bharat / elections

திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் வாக்குச்சாவடியில் தர்ணா - தர்ணா

திருச்சி: அமமுக வேட்பாளர் பெயர் இடம்பெற்ற வாக்கு இயந்திரம் இடமாற்றப்பட்டதால், தனக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் மாறிவிட்டன என அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்குச்சாவடிக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர்
author img

By

Published : Apr 18, 2019, 8:19 PM IST

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது வாக்கு இயந்திரத்தில் 1 முதல் 16 வரை சின்னங்களும், இரண்டாவது இயந்திரத்தில் அமமுக உள்ளிட்ட கட்சிகளின் சின்னம் இடம்பெற்றது. ஆனால் இரண்டாவது இயந்திரத்தில் முதலாவதாக அமமுக சின்னம் இடம்பெறாததால், தங்களது சின்னத்திற்கு வரவேண்டிய வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு சென்றுவிட்டதாக கூறி அதன் வேட்பாளர் தேர்தல் அலுவலர்களிடம் காலை முதல் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சாருபாலா தொண்டைமான் வாக்குச் சாவடிக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சமாதான பேச்சில் ஈடுபட்டனர்.

திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் வாக்குச்சாவடியில் தர்ணா

இதனால் அந்த வாக்குச்சாவடியில் சுமார் 40 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. தவறை சரிசெய்வதாக அலுவலர்கள் கூறியதையடுத்து தர்ணாவை கைவிட்டு அவர் கலைந்து சென்றனர்.

Intro:திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் புதுக்கோட்டை நகரில் உள்ள மச்சுவாடி நகராட்சி பள்ளியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வாக்கு இயந்திரம் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது அவருக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் மாறிவிட்டன எனவும் அதனை தேர்தல் அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு செலுத்தும் வாக்குச்சாவடிக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Body:திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இரண்டு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.முதலாவது வாக்கு எந்திரத்தில் 1 முதல் 16 வரை சின்னங்களும் இதில் முதல் சின்னமாக அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் மற்றொரு இயந்திரத்தில் 17ஆம் நம்பரிலிருந்து சின்னங்கள் துவங்குகின்றன.இது இரண்டாவது இயந்திரத்தின் முதல் வாக்கானது பரிசு பெட்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இரண்டாவது இயந்திரத்தில் முதலாவது பட்டன் பரிசு பெற்றதற்கு வாக்களிக்க வேண்டுமென வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர்.இந்நிலையில் வாக்குப் பெட்டி இடமாக இருப்பதால் இரண்டாவது வாக்கு எந்திரத்தில் முதலாவது வாக்காக அதிமுகவுக்கு வாக்குகள் மாறி விழுந்து விட்டதாகவும் இதனால் காலையில் இருந்து பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் அதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குப் விழுந்துவிட்டன என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு வரைந்தனர் நேரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் தொடர்ந்து சமாதானமாக பேச்சில் ஈடுபட்டு அதிகாரிகளிடம் இந்த வாக்குச்சாவடிகள் மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இங்கு வாக்குப்பதிவு நடத்தக்கூடாது என்றும் யாரையும் வாக்களிக்க விடப்போவதில்லை. என்றும் கூறி வாக்கு சாவடிக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்த தவறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்யாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அமர்ந்திருக்கும் நான் புதுகை தஞ்சை சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தார் இதனால் அந்த வாக்குச்சாவடிகள் பரபரப்பு பற்றிக் கொண்டது தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாக்குச்சாவடியை சுற்றி வருத்தப்பட்டனர் இதனால் சுமார் 40 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் உடனடியாக அந்த தவறை சரி செய்வதாகவும் சின்னங்கள் மாறி இருந்தாலும் வாக்குகள் மாறிவிடும் வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அங்கிருந்து கிளம்பினார். அதன் பின்னர் பொதுமக்கள் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க தொடங்கினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.