ETV Bharat / elections

தமிழிசைக்காக களமிறங்கும் சுஷ்மா சுவராஜ் - for

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் பரப்புரை செய்ய உள்ளார்.

தமிழிசைக்காக களமிறங்கும் சுஷ்மா சுவராஜ்
author img

By

Published : Apr 9, 2019, 7:42 PM IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தன்னை ஆதரித்து பரப்புரை செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருகின்ற 11 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளார்.

தூத்துக்குடி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவேதான் இந்த தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும், ஒரு நல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருப்பார் என்பதைதான் தேர்தலுக்கு பின் நிரூபித்துக் காட்டுவேன் எனவும் கூறினார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல எனக் கூறிய அவர், இந்து மதத்தை திமுகவினர் தொடர்ந்து நிந்தித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். மோடி அறிவித்த பாஜக தேர்தல் அறிக்கையால் 1 கோடி ஏழை குடும்பங்களின் அடிப்படை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் உயரும் என்றும் தெரிவித்தார்

தூத்துக்குடி.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும்போது,

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருகின்ற 11 ஆம் தேதி தூத்துக்குடி வருகைதரவுள்ளார் தொடர்ந்து அவர் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் என்னை ஆதரித்து நாடாளுமன்ற தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்கிறார்
தூத்துக்குடி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு போட்டியிடுகிறேன்.

ஒரு நல்ல பாராளுமன்ற உறுப்பினர் எப்படி இருப்பார் என்பதை நான் தேர்தலுக்கு பின்னர் நிரூபிப்பேன்.

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒரு நாடு எப்படி முன்னேற்றப்பாதையில்  செல்லும் என்பதை காட்டும் அறிக்கை.
அதை விமர்சித்து
ஸ்டாலின் என்றும், கே.எஸ்.அழகிரி வெள்ளை அறிக்கை எனவும் கூறியுள்ளனர். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை பழிவாங்குதல் நடவடிக்கை என்பதாக அர்த்தம் இல்லை. அவர்கள் தொடர்ந்து இது குறித்து பாஜகவை குற்றம் சாட்டி வருகின்றனர். திமுக இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

மேலும் இந்து மதம் பாஜகவிற்கு சொந்தமானது இல்லை என கருத்து கூறியிருக்கின்றனர். ஆனால், இந்து மதத்தை தொடர்ந்து திமுகவினர் நிந்தித்து  வருகின்றனர். இந்துக்களை எவ்வளவு வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம் என திமுகவினர் நினைக்கின்றனர்.
இந்துக்களை நிந்திப்பதால் நாங்களும் காயப்படுகிறோம் என இந்து மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். தற்போது அவர்கள் எல்லாரும் ஓட்டுக்காகத்தான் அரசியல் செயல்பாடுகளை நிகழ்த்துகின்றனர். எனவே ஸ்டாலினை மக்கள் நம்ப மாட்டார்கள்.

நீட் வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கும்போது அதை வேண்டுமென்றே நீக்குவோம்  என காங்கிரஸ்- திமுகவினர் சொல்வது மக்களை தெரிந்தே ஏமாற்றும் செயல். மோடி அறிவித்த பாஜக தேர்தல் அறிக்கையால் 1 கோடி ஏழை குடும்பங்களின் அடிப்படை கட்டமைப்பு வலுப்படுத்தபடும். இதனால் அந்த மக்கள் வாழ்வாதாரம் உயரும்.

தற்போது தமிழகத்தில் நிலவுவது எதார்த்தமான கள நிலை.
தமிழ்நாட்டில் இனிதான் பாஜகவிற்கு சாதகமான சூழல் வரும். பாஜக ஜனநாயக ரீதியான கட்சி
தற்போது தமிழகத்தில் சொல்லப்படும் கருத்துக்கணிப்புகள் முழுவதுமாக ஆரயாத முதிர்ச்சியடையாத கருத்துக்கணிப்பு. நதிகளை இணைக்க வேண்டும் என வாஜ்பாய் கூறினார். இது நீண்ட கால திட்டம். வாஜ்பாய் அதை அறிவித்த உடனேயே 1 கோடி ரூபாய் நிதி அறிவித்து ஆதரவு தெரிவித்தார். அதுபோல் தற்போதும் ஆதரவு தெரிவித்துள்ளார். உலகத்திற்கு சோறு போடும் திட்டம் இது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். மறைந்த தலைவர் கருணாநிதியின் பேச்சில் ஒரு உவமை இருக்கும். அதில் நாகரீகமான கருத்துக்களை எடுத்துரைக்கும் அளவுக்கு அவர் உவமையோடு பேசுவார். ஆனால் இவர் மு.க. ஸ்டாலின் பேச்சு நாளுக்கு நாள் மக்களிடையே அவருக்கு இருக்கும் நன்மதிப்பினை வேகமாக குறைத்துக் கொள்ளும் அளவுக்கு 
மிக வேகமாக சரிந்து வருகிறார்
எனக்கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.