ETV Bharat / elections

அதிமுக ஆட்சியை ஜெயலலிதா கவனித்து வருகிறார் - ஒபிஎஸ்

சென்னை: நான் இல்லாத நேரத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துக்கிறார்களா என அம்மா கண்காணித்து வருவதாக ஒ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

ஒ.பி.எஸ்
author img

By

Published : Apr 5, 2019, 10:47 PM IST

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,

வடசென்னை தொகுதியில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சிறந்த எம்.பியாக இருப்பார். சேது சமுத்திர திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ. 40 ஆயிரம் கோடியை திமுகவினர் கடலில் போட்டார்களா அல்லது யார் வீட்டிலும் போட்டார்களா என்று இதுவரை தெரியவில்லை.

அதிமுக ஆட்சியை ஜெயலலிதா கவனித்து வருகிறார்- ஒபிஎஸ்

மேலும் சுனாமி, புயல், பூகம்பம் என எது வந்தாலும் அதிமுக அரசை எதுவும் செய்ய முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஜோசியர் சொன்னார் என்று பல கலர் சட்டை போட்டார், அவருக்கு எதுவுமே எடுபடவில்லை. நான் இல்லாத நேரத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துக்கிறார்களா என அம்மா கண்காணித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.04.19

நாம் இல்லாத நேரத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துக்கிறார்கள் என அம்மா கண்காணித்துக்கொண்டுள்ளார்; ஒ.பி.எஸ் பரப்புரையில் பேச்சு..

வட சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து  ராயப்பேட்டையில் தேர்தல் பரப்புரையாற்றினார் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். அப்போது பேசிய அவர்,
வட சென்னை பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஜெயவர்தன் சிறந்த எம்.பி யாக இருப்பார். மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் தான் செய்துள்ளோம். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்க வேண்டும். சேது சமுத்திர திட்டத்திற்கு அள்ளப்படும் மணல் கொட்டப்பட்டால் அது நகரும் என்றார் ஜெயலலிதா.. அதற்காக 40 ஆயிரம் கோடியை கடலில் போட்டார்களா... அல்லது யார் வீட்டிலும் போட்டார்களா என்று தெரியவில்லை. காவிரி நடுவர் மன்றம் நிறுவி 17 ஆண்டுகளுக்கு பின் 2011 ற்கு பின் உச்ச நீதிமன்றம் சென்று 2013 ல் தீர்ப்பு பெறப்பட்டது.. ஜெயலலிதா அரசாணையை பெற்றுத் தந்தார்.
நம் சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என பல நன்மைகளை அம்மா செய்துள்ளார்.. தனி நபர் வருமானம் பெருக திட்டங்கள்.. 15 லட்சம் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். 34 லடசம் முதியோர்களுக்கு பென்சன் திட்டம், தாலிக்கு தங்கம் கொடுக்கிறோம். ஏற்கனவே கொடுத்த பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் தருகிறோம். 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 200 0 தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும். சிறுபான்மை மக்கள் இங்கு பாதுகாப்பாக வாழ்கின்றனர். இதெல்லாம் ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. இது தொண்டர்கள் இயக்கம்.. இதனை யாராலும் அழிக்க முடியாது. சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.  ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்று அவருக்கு தெரியவில்லை. ஜோசியர் பேச்சை கேட்டு பல கலர் சட்டை போட்டார் ஸ்டாலின்.. எதுவும் எடுபடவில்லை.  ஸ்டாலின் டீ சாப்பிடுகிறார்.. நாம் டீ கடை நடத்தியுள்ளோம். நாம் இல்லாத நேரத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துக்கிறார்கள் என அம்மா கண்காணித்துக்கொண்டுள்ளார். அவரது ஆத்மாவுக்கு பயந்து அனைத்தையும் பயந்து பயந்து செய்துகொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கு கல்வி சலுகைகளை செய்ததால் கல்வி வளர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. யார் நல்லது செய்தார்கள், யார் மறுத்தார்கள் என அறிந்து வாக்களியுங்கள்.  99 வட்டங்களில் தேர்தல் செல்லாது என நீதிமன்றம் சொல்லியது.. திமுக காங்கிரசில் அடாவடி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவார்கள்.  ஜெயவர்தன் சத்தமாக கூட பேச மாட்டார். புரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டுமா... வேண்டாமா...? திமுகவினர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.