ETV Bharat / elections

மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் மனைவியை ஆதரித்து நடிகர் நாசர் பரப்புரை - kamilzha nasar

சென்னை: இது பெண்களுக்கான காலம் என்பதால் பெண்களின் பிரதிநிதியாக நிற்கும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலாவுக்கு வாக்களியுங்கள் என நடிகர் நாசர் பரப்புரை மேற்கொண்டார்.

நடிகர் நாசர் பரப்புரை
author img

By

Published : Apr 14, 2019, 9:46 AM IST

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமீலா நாசர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கமீலா நாசரின் கணவரும், நடிகருமான நாசர் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் ஒரு நடிகனாகவோ அல்லது கமீலாவின் கணவனாகவோ இங்கு வரவில்லை. 35 ஆண்டுகளாக கமீலாவோடு பயணித்த உற்ற நண்பனாக இங்கு வந்துள்ளேன். இந்த 35 வருட பழக்கத்தில் அவர்களின் நிர்வாக திறமை, கல்வி, அணுகுமுறை என்ன என்று எனக்கு தெரியும்.

நடிகர் நாசர் பரப்புரை

இது பெண்களுக்கான காலம். பெண்கள் வீட்டோடுதான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. இன்று இந்தியாவில் பெண்கள் விமானம் முதல் ஆட்டோ வரை அனைத்தும் கையாளுகிறார்கள். பெண்களுடைய காலம் என்பதால் ஒரு பெண்களின் பிரதிநிதியாக கமீலாவை நீங்கள் ஆதரிக்க வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் வாக்களிக்கச் சொல்லுங்கள். நம்முடைய முதல் கடமை நூறு விழுக்காடு வாக்குப்பதிவை கொண்டு வரவேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இது பெண்களுக்கான காலம் பெண்களின் பிரதிநிதியாக நிற்கும் கமலா நாசருக்கு வாக்களியுங்கள் நடிகர் நாசர் தேர்தல் பிரச்சாரம்,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னையில் கமீலா நாசர் போட்டியிடுகிறார் கமீலா நாசர் ஆதரித்து நடிகர் நாசர் என்று அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய நடிகர் நாசர்,

உங்களை எல்லோரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் ஒரு நடிகனாக போ அல்லது கமலாவின் கணவனாகவும் நான் இங்கு வரவில்லை. 35 ஆண்டுகளாக கமீலாவோடு பயணித்த உற்ற நண்பனாக இங்கு வந்துள்ளேன். இந்த 35 வருட பழக்கத்தில் அவர்களின் நிர்வாக திறமை, கல்வி, அணுகுமுறை  என்ன என்று எனக்கு தெரியும் .கமீலா  வின் பணி சமூகத்திற்கும் வரவேண்டும் என்பதற்காக கமலஹாசன் அவர்கள் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம்  கட்சி முடிவெடுத்திருக்கிறது. இது பெண்களுக்கான காலம். பெண்கள் வீட்டோடு தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. இன்று இந்தியாவில் பெண்கள் விமானம்  முதல் ஆட்டோ வரை அனைத்தும் கையாள்கிறார்கள். பெண்களுடைய காலம் அதனால் ஒரு பெண்களின் பிரதிநிதியாக கமீலாவை நீங்கள் ஆதரிக்க  வேண்டும் முக்கியமான விஷயம் என்னவென்றால் , இந்த தேர்தலில் உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள் . நம்முடைய முதல் கடமை நூறு சதவிகித வாக்கு பதிவை கொண்டு வரவேண்டும். இதற்கு முன்பு  எந்த கட்சிக்கு ஓட்டு போட்டும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து விவாதியுங்கள் .அதுமட்டுமல்லாமல் இன்று வாக்கு வாங்கப்படுகிறது விற்கப்படுகிறது. இது சுயமரியாதைக்கான விஷயம் அல்ல உங்களுக்கு கொடுக்கப்பட்ட காசு உங்களுடைய திட்டங்களில் இருந்து வேறு வகையில் அது பறிக்கப்படும். அதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புதிய மாற்றத்திற்கான காலம்.  பல இடங்களில் பல மாற்றங்கள் வருகிறது அந்த மாற்றத்தின் சின்னமாக கபிலா நாசரை முன்னிறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் இருக்கு டார்ச் லைட் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இருளைப் போக்க கூடிய ஒரு டார்ச் லைட்டாக அவர் இருப்பார் என்று நடிகர் நாசர் பிரச்சாரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர்.

மத்திய சென்னையில் டார்ச் லைட் சின்னத்தில் களம் காண்கிறேன் . உங்களுடைய சுயமரியாதையை இழந்து வாக்குக்கு பணம் பெற்று வாக்களிக்க செல்லாதீர்கள். அப்படியே செய்யக் கூடிய நிலைமை ஏற்பட்டாலும் விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டு போடலாம் தவறு ஒன்றும் இல்லை .உங்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தான் நாங்கள் வந்துள்ளோம். அனைவரும் எனக்கு சரி சமமாக வரவேண்டும் என்று தான் இங்கு வந்து இருக்கிறேன்.  உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும் அதற்கான மாற்றம் இப்போது வந்துவிட்டது. மாற்றத்தின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் .தயவுசெய்து எங்களுக்கு கை கொடுங்கள். மாற்றத்தின் விடியலாக இந்த டார்ச் லைட் வந்திருக்கிறது. டார்ச் லைட் சின்னத்தில் ஓட்டு போட யோசியுங்கள் .ஓட்டு போடுங்கள் என்று கூட நாங்கள் சொல்ல மாட்டோம் .ஏனென்றால் அதில் உங்களுடைய விருப்பம் உங்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றால் நீங்கள் வாக்களியுங்கள். ஏனென்றால் கடந்த 50 ஆண்டு காலமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் திட்டங்கள் அனைத்தும் 10 முதல் 20 சதவிகிதம் மட்டுமே நடந்துள்ளது 80 சதவிகித திட்டங்கள் எங்கே சென்று விட்டது என்று தெரியவில்லை. 80 சதவீத பணிகளையும் செய்திருந்தார்கள் என்றால் நிச்சயமாக தமிழகம் சுபீட்சமான பாதையில் சென்று இருக்கும். உலக வரைபடத்தில் நம்ந பச்சைப் பசேல் என்று இருந்திருக்கும் என்று தமது தேர்தல் பிரச்சாரத்தில் கமீலா நாசர் பேசினார்.

வீடியோ மோஜோவில் அனுப்பி உள்ளேன்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.