நாட்டின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்ற, புதிய வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் அனுபவமிக்க மூத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம் என்றும், அது போன்று புதிய கட்சிகளைத் தவிர்த்து, பழைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை தான் தேர்ந்தெடுப்போம். அவர்கள் தான் அனுபவம் வாய்ந்தவர்களாகவும், திறமையாகவும் செயல்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.