நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களவைத் தேர்தலின்போது மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், மே 23ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க உயர்மட்ட அளவிலான ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் என அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.