ETV Bharat / elections

நிதின் கட்கரிக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் - கருப்புகொடி போராட்டம்

சேலம்: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் அவருக்கு கருப்புகொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதின் கட்கரிக்கு எதிராக கருப்புகொடி போராட்டம்
author img

By

Published : Apr 14, 2019, 9:39 PM IST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுகூட்டம் நடத்தப்பட்டது. சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த அக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய தரை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கட்கரி பேசுகையில், எட்டு வழி சாலை திட்டம் கட்டாயம் அமைந்தே தீரும். ஒரு சில மாற்றங்கள் செய்து மீண்டும் இந்த பசுமை சாலை அமையும் என்றார். இதற்கு விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சேலம் பூலாவரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழ்நாட்டை விட்டு நிதின் கட்கரி வெளியேற வேண்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

farmers protested against nitin gadkari
எடப்பாடி அரசை அனைத்து பகுதிகளிலும் நாங்கள் தோற்கடிப்போம்

போராட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது, கடந்த ஒன்றரை வருடகாலமாக எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடி நீதிமன்றங்கள் சென்று மிகப்பெரிய துயரத்துக்கு உள்ளானோம். எங்களுடைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்தின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

நாங்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்த நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டு வழி சாலை அமையும் என்று கூறியது மனவேதனை அளிக்கிறது. எட்டு வழி சாலை திட்டம் என்பதே விவசாயிகளை பாதிக்கின்ற திட்டம் தான். உயர் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மதிக்காமல் மத்திய அமைச்சர் சாலை அமைத்து தீருவேன் என்று கூறுவது நீதிமன்றத்தை அவமதிப்பது போல் உள்ளது.

ஆனால், அவர் பேசுகின்ற பொழுது அருகில் இருந்த ராமதாஸோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ எந்த ஒரு ஆட்சேபணையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது

இந்த எட்டு வழி சாலை திட்டம் அமைகின்ற பட்சத்தில் எடப்பாடி அரசை அனைத்து பகுதிகளிலும் நாங்கள் தோற்கடிப்போம். ஒருபொழுதும் எங்களது வாக்கு அவர்கள் கூட்டணிக்கு கிடைக்காது என்று கூறினர்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.