ETV Bharat / elections

திமுக முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம்!

தருமபுரி: திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதம் தருமபுரி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம்!
author img

By

Published : Apr 9, 2019, 10:28 PM IST

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற நான்கு நீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தருமபுரி மாவட்டத்தில் மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்து கருகிப் போய் விட்டதாகவும், விவசாயம் முற்றிலும் அழிந்து மாவட்டமே பாலைவனமாக காட்சி அளிப்பதாகவும் முல்லைவேந்தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகள் வறுமையில் சிக்கி வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்கு அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக படை எடுத்துச் செல்வதாகவும், இந்த அவல நிலையைப் போக்குவதற்கு தமிழ்நாடு அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் போர்கால அடிப்படையில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த முல்லைவேந்தன் திமுகவிலிருந்து விலகி சிறிது காலம் தேமுதிகவில் இருந்தார். பிறகு, மீண்டும் திமுகவில் இணைந்து கட்சியில் எந்த பொறுப்பும் அளிக்காததால் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் இருந்த இவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதம் தருமபுரி அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் தருமபுரிமாவட்ட அரசியலில் பரபரப்பு..

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .அந்தக் கடிதத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். என்பது குறித்து 4 நீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளவை

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தருமபுரி மாவட்டத்தில் மரம் செடி கொடிகள் எல்லாம் காய்ந்து கருகிப் போய் விட்டன விவசாய முற்றாக அழிந்து போய் மாவட்டமே பாலைவனமாக காட்சி அளிக்கிறது. ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அனைத்தும் தீவனமும் .குடிக்கத் தண்ணீர் இன்றி தவிப்பதால் அடி மாட்டு விலைக்கு விற்கப்படுகிறது . விவசாயிகள் வறுமையில் சிக்கி சீரழிந்து வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்காக அண்டை மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க அகதிகளாக கொத்தடிமைகளாக படை எடுத்துச் செல்கின்றனர்.  இந்த அவல நிலையைப் போக்குவதற்கு தமிழக அரசும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் போர்கால அடிப்படையில் வறட்சி நிவாரண உரிய இழப்பீடும் வழங்க விவசாய கடன் முழுமையும் தள்ளுபடி செய்து விவசாயிகளை விவசாய கூலித்தொழிலாளி காத்திட வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும் இம்மாவட்ட மக்களின் ஆண்டுதோறும் வறட்சியால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நாக சமுத்திரம் அணையிலிருந்து மொரப்பூர் பகுதியில் உள்ள 30 ஏரிகளுக்கு தண்ணீர் விடும் திட்டம்.  ஈச்சம்பாடி அணையிலிருந்து நீர் உந்தும்  திட்டத்தின் மூலம் மொரப்பூர் பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் விடும் திட்டம் . என நான்கு திட்டத்தை முன்னிறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன்

.முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தற்போது திமுகவில் இருக்கிறார் .ஆனால் அவர் இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல் மௌனமாக மௌனம் சாதித்து வருகிறார் . முல்லைவேந்தன் திமுகவில் அமைச்சராக இருந்தவா்.  பின்பு தேமுதிகவில் இணைந்தார் மீண்டும் திமுகவில் இணைந்தார்.  ஆனால் அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்க வழங்காத நிலையில் அவர் மௌனம் சாதித்து வந்தார் . இந்த நிலையில் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் தருமபுரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார் மேலும் நாளை மறுநாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரியில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரமாக தருமபுரி வருகிறார் இந்த சூழ்நிலையில் முல்லைவேந்தன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியது தருமபுரி அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.

நாளை மறுநாள் தருமபுரி  வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை  முல்லைவேந்தன் சந்தித்து கோரிக்கை மனுஅளிப்பாரா என்ற கேள்வி.  திமுகவினரும் மற்ற கட்சியினரிடமும் எழுந்துள்ளது.  மொத்தத்தில் தருமபுரி தேர்தல் களம் முல்லைவேந்தன் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் சூடுபிடித்துள்ளது.

--
index.jpg
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.