பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைதியநாதன், திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து தமிழக துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அவருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில் :
இந்த கூட்டணி, மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபால்,
பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வைதியநாதன் ஆகியோர் வெற்றி வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். வேணுகோபாலை
மீண்டும் தேர்வு செய்தால் பணிகளை நிறைவேற்றுவதில் சிறப்பாக இருப்பார்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் இரண்டிலும் மக்களாகிய நீங்கள் தான் எஜமானர்களாகவும், நீதிபதியாகவும் செயல்படுகிறீர்கள். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக - காங்கிரஸ் ஆட்சி நடந்துள்ளது. யாருடைய ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பனித்தது யார் என்று நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டும், திமுக - காங்கிரஸ் ஆட்சியில் 10 அமைச்சர்கள் கொலு பொம்மையாக தான் இருந்தார்கள்.
தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானமாக செல்கிறது. ஆனால் 10 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக - காங்கிரஸ் உருப்படியாக ஏதும் செய்யவில்லை, நிதி வந்து சேரவில்லை மக்களை ஏமாற்றலாம் என மீண்டும் கூட்டணி அமைத்து வந்துள்ளார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது
20 கிலோ இலவச அரிசி கொடுத்து
உணவு பாதுகாப்பை உருவாக்கி உள்ளார்.
கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என தெரிவித்தார். இதுவரை 6லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 2023 க்குள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும், பேறுகால நிதி உதவி 12 ஆயிரத்தில் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் இறுதி தீர்ப்பை அரசு அணையாக பெறவில்லை, ஜெயலலிதா நீண்ட சட்டபோராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் தான் இறுதி தீர்ப்பு பெற்று தரப்பட்டு அரசானையாக வெளியிடப்பட்டது. காங்கிரஸ் - திமுக செயலற்ற அரசாக மத்தியில் இருந்தது.
ஸ்டாலின் முதல்வராக வர முடியாது.
இந்த நாடாளுமன்ற தேர்தலோடு அதிமுக காணாமல் போய் விடும் என்று கூறுகிறார். ஆனால் இது எம்.ஜி.ஆர் உருவாக்கிய தொண்டர்கள் இயக்கம் இது சுனாமி, புயல், பூகம்பமே வந்தாலும் அதிமுகவை அசைக்கவே முடியாது. உங்கள் தந்தை கருணாநிதியாலே முடியவில்லை உங்களால் முடியவே முடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெய்வமாக வானத்தில் இருந்து ஆட்சியை எப்படி நடத்துகிறோம் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதனால் நாங்கள் பயந்து போய் ஆட்சி நடத்துகிறோம், ஜெயலலிதா திட்டங்களை கூடுதலாக நாட்டு மக்களுக்கு கொடுத்து வருகிறோம், மாமன், மச்சான் சண்டையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தீ வைத்து எரித்தார்கள். அற்கு 3 ஆயுள் தண்டனை வந்துள்ளது.
ஸ்டாலின்கலர், கலராக சட்டை போட்டுக்கொண்டு வலம் வந்தார் டீ கடைக்கு சென்று டீ குடித்தார். ஆனால்
நாம் டீக்கடையே நடத்தி உள்ளோம், ஸ்டாலின் மக்களை ஏமாற்ற முடியாது.
28 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடத்தி வருகிறது. 28 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் இல்லை,
மக்கள் இயக்கமாக மக்கள் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறோம்.
சேது சமுத்திர திட்டம் வீனான திட்டம் என்று ஜெயலலிதா கூறினார். அந்த பகுதியில் நகரும் தன்மை கொண்ட மணல் இருப்பதால் மீண்டும் மேடாகி விடும் கப்பல் செல்ல முடியாது என்று கூறினார். ஆனால் 40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டு விட்டார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, லஞ்சம், ஊழல் அதிகரித்து இருந்தது இதனால் அவர்களால் வர முடியாது.
தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்கும் மேகதாது அனை கட்ட அனுமதி தருவோம் என்று ராகுல்காந்தி கர்நாடகாவில் பேசி உள்ளார். ராகுல்காந்தி பிரதமர் ஆக முடியாது என்றும் இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார். உடன் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் இருந்தனர