மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நாகராஜன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், 'மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பகுதியில் பொது தேர்தல் பார்வையாளர், பொது செலவின பார்வையாளர் ஆகியோர் உள்ளனர்.
இப்பகுதியில் 99 வாக்கு மையங்களில் 297 வாக்குச்சாவடிகள் உள்ளன. இது 88 வாக்குச்சாவடிகள் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளாக இருக்கின்றனர். இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டி, வெவ்வேறு இடங்களில் இரண்டு வாக்காளர் அட்டை வைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்' என தெரிவித்தார்.