ETV Bharat / elections

மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்ட மூத்த வாக்காளர்

திருவண்ணாமலை : திருப்பத்தூர் அருகே மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் 101 வயதுடைய மூத்த வாக்களரை மேளதாளத்துடன் வாக்களிக்க அழைத்துச் சென்றது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த வேட்பாளர் பெரியசாமி
author img

By

Published : Apr 18, 2019, 3:08 PM IST

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (101). விவசாய கூலி தொழிலாளியான இவர் தற்போது மகனின் பராமரிப்பில் உள்ளார்.

101வயதை கடந்ததால் தொகுதியின் மூத்த வாக்காளர் என்பதையறிந்த மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் பிரியங்கா, பெரியசாமி வீட்டிற்கு நேரில் சென்று அவரை மேளதாளத்துடன், மாலை அணிவித்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தார். மேலும் ஊர்மக்கள் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Intro:திருப்பத்தூர் அருகே 102 வயது முதியவருக்கு சப்- கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மேளதாளத்துடன் வரவேற்று வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச்சென்றார்.

Body: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுத்திக்குட்பட்ட கந்தலி அடுத்த கும்மிகான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (102).

இவர் விவசாய கூலி தொழில் செய்து வந்துள்ளார். தற்போது அவர் மகனின் பராமரிப்பில் உள்ளார். இந்நிலையில் தற்போது நடைப்பெறும் தேர்தலில் வாக்களிக்க பெரிய சாமியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மூத்த வாக்காளர் என்ற முறையில் அவருக்கு ஊர் பொது மக்கள் சார்பிலும் மாலை மரியாதைகள் மற்றும் மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

Conclusion: அதன் பின் பெரியசாமி அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார் இதுவரையிலும் இவர் 60 தேர்தல்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.