திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, புட்லூர் ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக கலக்கும் கழிவுநீரை 10 ஆண்டுகள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளது.
இந்த தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இதனை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன். அதேபோல், புட்லூர் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றும், விவசாயிகளின் நலன் கருதி விவசாய பண்ணை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தின் போது திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமாரும் அவருடன் சென்று வாக்கு சேகரித்தார்.