தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டபேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிபட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய 18 தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
வாக்காளர்கள் ஆர்வமுடன் காலை முதல் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றார்கள்.