மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பாக உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த உடனே காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என மகாத்மா காந்தி கூறியது, நேரு குடும்பத்தில் காங்கிரஸ் கட்சி சிக்கி கொள்ளும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் என ஆதித்தியநாத் கூறினார்.
அதனை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தற்போது உண்மையாக்கிவிட்டதாகவும் ஆதித்தியநாத் தெரிவித்தார். மேலும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வளர்ச்சியை முன்னேடுக்காததால்தான் தற்போது கேரளாவில் ராகுல் போட்டியிடுவதாகவும் ஆதித்தியநாத் விமர்சித்தார்.