பாஜகவின் கோட்டை என கருதப்படும் லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ சாலை பரப்புரையில் ராஜ்நாத் சிங்
ஈடுபட்டார்.
தொடர்ந்து ஆறு முறையாக லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றிபெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் ஐந்து முறை வென்ற மறைந்த பாஜகவின் தலைவர் வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவே இருந்தார்.
பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பாக வலிமைமிகுந்த வேட்பாளரை இங்கு நிறுத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் ராஜ்நாத், காங்கிரஸ் வேட்பாளர் ரிதா பஹுகனா ஜோசியை விட இரண்டு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று இங்கு வென்றார்.
இதுகுறித்து ராஜ்நாத் கூறுகையில், மக்களின் ஆதரவையும், ஆசியையும் பெற்று வாஜ்பாயின் கனவான லக்னோவை உலக தலைசிறந்த நகரமாக மாற்றிகாட்டுவேன் என்றார்.