மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்று மோடியுடனான நேர்காணலை ஒளிபரப்பு செய்தது. அதில் மோடி, "பாலகோட் தாக்குதலின் போது மேகமூட்டம் அதிகமாக இருந்ததால், பாக்., மீதிான தாக்குதல் திட்டத்தை வேறொரு நாளுக்கு மாற்றிவிடலாம் என இந்திய விமானப்படை நிபுனர்கள் பிரந்துரைத்தனர். ஆனால், இப்போது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் ரேடார் கருவியால் இந்திய போர் விமானங்களை கண்டறிவதற்கு சிரமம் ஏற்படும் என நான் கூறினான்" என்றார்.
மேகமூட்டத்தின்போது ரேடார் கருவியால் விமானங்களை கண்டறிய முடியாது எனக் கூறியிருப்பது அறிவியலுக்கு மாறானது என அறிவியல் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள், இணையதள வாசிகள் என பல்வேறு தரப்பினரும் மோடியை விமர்சித்து வருகின்றனர்.
சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்கள்
இதுகுறித்து, காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி கடந்த ஐந்தாண்டுகள் முழுவதும் பொய்களை மட்டுமே பேசியுள்ளார் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு’ என பதிவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி பேசியுள்ளது வெட்கக்கேடாக உள்ளது. இந்திய விமானப் படையை அவமானப் படுத்தியுள்ளார்’ என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.