விழுப்புரம்: திண்டிவனம் - மரக்காணம் சாலை, ஆலத்தூர் கூட்டுப் பாதை அருகே வேளாண் துறை அலுவலர் சரவணன் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர் மகன் மோகன்ராஜ் (24), என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணம் இன்றி அவர் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பணத்தை திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் அனுவிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: வாகன சோதனை செய்த உதவி காவல் ஆய்வாளரை தாக்கிய நபர் : போலீசார் விசாரணை