பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் எவை என்பது குறித்து சென்னையில் அதிமுக, பாஜக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர்.
உடனுக்குடன்: அதிமுக - பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை - தேர்தல் அறிக்கை 2021
22:29 March 07
அதிமுக - பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை
21:10 March 07
ஓபிஎஸ் உடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், மீண்டும் தேமுதிக நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதி என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.
20:56 March 07
முதலமைச்சர் - தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக நிர்வாகிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.
20:35 March 07
234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் சீமான்!
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை. அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது' என தெரிவித்துள்ளார்.
20:11 March 07
திருவொற்றியூர் தொகுதியில் களம் காணும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், சீமான் தான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நாம் தமிழர் கட்சி என்பது ஒரு கட்சியின் பெயர் அல்ல. அது ஒரு புரட்சியின் பெயர்" என தெரிவித்துள்ளார்.
20:04 March 07
அதிமுகவுக்கு.. அதிரவைக்கும் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்!
- குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான லட்சியப் தொலைநோக்கு திட்டம் அறிவித்துள்ளார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்
நீர்வளம், கல்வி, சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமான அறிவிப்புகள்
- எஸ்.சி, எஸ்.டி, கல்வித்தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்
- மனித கழிவை மனிதரே அகற்றும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும்
- பள்ளி இடைநிற்றல் விழுக்காடு குறைக்கப்படும்
- பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும்
- நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
- அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி
- தமிழ்நாட்டின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை
- கல்வி, சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும்
- துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19:53 March 07
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தும் 7 உறுதிமொழிகளை பட்டியலிட்டு பேசினார்.
19:10 March 07
திமுக - ம.கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு!
திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் நாளை அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13:44 March 07
நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் - கமல் ட்வீட்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ட்விட்டர் பதிவில், “மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
11:25 March 07
சட்டப்பேரவைத் தேர்தல் 2021: அமித் ஷா கன்னியாகுமரி வருகை!
தேர்தல் பரப்புரைக்காக இன்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுசீந்திரம் தானுமலையான் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.