சட்டப்பேரவைத் தேர்தல் 2021: அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலவரங்கள் உடனுக்குடன் - தமிழ்நாட்டின் 'விடியலுக்கான முழக்கம்' நாளை திருச்சியில்!
22:52 March 06
தொகுதி எண்ணிக்கை முதல் கூவத்தூர் சத்தியம்வரை: இன்றைய தேர்தல் சரவெடி
22:46 March 06
மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் மறுப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் உள்ள சூழலில், காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு காங்கிரஸ் வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளது.
21:07 March 06
'விடியலுக்கான முழக்கம்' நாளை திருச்சியில்!
திமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் நாளை திருச்சியில், நடைபெறுகிறது. இதில், அடுத்த பத்தாண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை அக்கட்சி வெளியிடுகிறது. இது குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "தீரர் கோட்டத்தில் வெளிப்படும் முதல் முழக்கம், திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும். உதயசூரியனின் வெளிச்சத்தில் தமிழ்நாடு விடியட்டும்! விடியும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
20:58 March 06
இது விசிகவின் உத்தேச பட்டியல் இல்லை - திருமா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் எனப் பரவிவரும் தகவலில் உண்மையில்லை. இயக்கத் தோழர்கள் இதனைப் பொருட்படுத்த வேண்டாம். தொகுதிகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்த பின்னர் தேர்வுக்குழு வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும், அதன்பிறகே அறிவிக்கப்படும் எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20:30 March 06
முதலில் 41 இப்போ 23 - அப்டேட்டான தேமுதிக!
முதலில் 41 இடங்கள் கேட்டோம், தற்போது 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துவிட்டோம், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை, எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளது என தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
20:24 March 06
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் மார்ச் 10
மக்கள் நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ஆம் தேதி வெளியீடு.
18:26 March 06
எடப்பாடியுடன் ஜி.கே. வாசன் சந்திப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தொகுதிப்பங்கீடு குறித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே. பழனிசாமியை அவரது முதலமைச்சர் இல்லத்தில் சந்தித்துப் பேசிவருகிறார்.
17:58 March 06
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக உடன் கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது.
17:06 March 06
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 23 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறது.
15:55 March 06
பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
- மயிலாப்பூர் - கே.டி. ராகவன்
- காரைக்குடி - ஹெச்.ராஜா
- சேப்பாக்கம் - குஷ்பு
- வேளச்சேரி - டால்பின் ஸ்ரீதர்
- காஞ்சிபுரம் - கேசவன்
- திருத்தணி - சக்கரவர்த்தி
- பழனி - கார்வேந்தன்
- சிதம்பரம் - ஏழுமலை
- கிணத்துக்கடவு - அண்ணாமலை
- கோயம்புத்தூர் தெற்கு - வானதி சீனிவாசன்
- ராசிபுரம் எல். முருகன் (தமிழ்நாடு பாஜக தலைவர்)
- ஆத்தூர் - வி.பி.துரைசாமி
- திருவாரூர் - முருகானந்தம்
- திருவண்ணாமலை - தணிகைவேல்
- வேலுர் - கார்த்தியாயினி
- ஒசூர் - நரேந்திரன்
- தூத்துக்குடி - சிவ முருக ஆதித்தன்
- திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
- ராஜபாளையம் - நடிகை கவுதமி
- சென்னை துறைமுகம் - வினோஜ் பி.செல்வம்
ஆகியோர் வேட்பாளர்களாக உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
15:53 March 06
காங்கிரஸ் கட்சியை வரவேற்கும் மநீம
மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என அதன் பொதுச் செயலாளர் சி.கே குமரவேல் தெரிவித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவிவரும் வேளையில் இந்த கருத்தை அவர் கூறியுள்ளார்.
15:37 March 06
விசிக உத்தேசப் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
- செய்யூர் (தனி) - பனையூர் பாபு
- காட்டுமன்னார்கோவில் (தனி) - சிந்தனை செல்வன்
- திட்டக்குடி (தனி) - பார்வேந்தன்
- புவனகிரி (தனி) - எழில் கரோலின்
- மயிலம் - பாலாஜி
- உளுந்தூர்பேட்டை - முகமது யூசப்

14:52 March 06
தேமுதிகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்!
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று (மார்ச் 6) சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.
இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே. சுதீஷ், ப. பார்த்தசாரதி, எஸ். அக்பர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
13:26 March 06
அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சிக்கு எத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த உயர்மட்ட நிர்வாகிகள் குழு உடனான பேச்சுவார்த்தை இன்று மாலை தனியார் விடுதியில் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
13:24 March 06
பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கீடுசெய்யப்பட்டு தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
13:04 March 06
மதிமுகவிற்கு அழைப்புவிடுத்த திமுக!
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச மதிமுக நிர்வாகிகளுக்கு திமுக தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13:03 March 06
அதிமுக ஆலோசனைக் கூட்டம் நிறைவு
அதிமுக தமைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற்றுவந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
12:54 March 06
கன்னியாகுமரியில் களமிறக்கப்பட்டார் பொன்னார்!
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கட்சியின் மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடப்போவதாக கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
12:50 March 06
திமுக நேர்காணல் முடிவடைந்தது!
நான்கு நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்ற திமுக தொகுதி விருப்ப மனு தாக்கல்செய்தவர்களுக்கான நேர்காணல் நிறைவுபெற்றது.
12:47 March 06
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக கருணாஸ் அறிவிப்பு!
முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதன் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
11:34 March 06
சட்டப்பேரவைத் தேர்தல் 2021
தொடர்ந்து நான்கு நாள்களாக காலை 9 மணி தொடங்கி இரவு 10 மணி வரை திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றுவருகின்றது. இன்று சென்னை தொகுதிகளுக்குள்பட்டவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுவருகிறது.
திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்த திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நேர்காணலில் கலந்துகொண்டார்.