அமமுக சார்பில் சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிள்ளியூர் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்குப் பதிலாக தற்போது சீமா வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21:22 March 15
அமமுக வேட்பாளர் மாற்றம்

19:17 March 15
ராதிகா, சரத்குமார் போட்டியில்லை
18:34 March 15
'தேர்தலன்று ஊதியத்தோடு விடுமுறை அளிக்க வேண்டும்'
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அன்று தொழிலாளர்கள் அனைவருக்கும் கூடிய ஊதியத்தோடு கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
18:16 March 15
இபிஎஸ் சொத்து மதிப்பு குறைந்தது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுவில் தாக்கல்செய்த சொத்து மதிப்பிலிருந்து தற்போது ஒரு கோடி ரூபாய் குறைந்துள்ளது.
17:35 March 15
ஸ்டாலினைவிட உதயநிதியின் சொத்து மதிப்பு அதிகம்
17:17 March 15
ஓவைசி கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
அமமுக கூட்டணியில் போட்டியிடும் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) போட்டியிடும் மூன்று தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
16:59 March 15
திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மண்டலப் பொறுப்பாளர்களை திமுக நியமித்துள்ளது
16:38 March 15
நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
நாளை (மார்ச் 16) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை - சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16:17 March 15
ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டி
15:50 March 15
சீமான் வேட்புமனு தாக்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
15:38 March 15
மயில்சாமி சுயேச்சையாக போட்டி - ரஜினி வாழ்த்து
நடிகர் மயில்சாமி சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு தனிப்பட்ட முறையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
15:16 March 15
கமல் வேட்புமனு தாக்கல்
கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
14:11 March 15
எடப்பாடிக்கு பக்குவம் போதாது - பிரேமலதா
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'ஜெயலலிதாவின் பக்குவம் முதலமைச்சர் பழனிசாமியிடம் இல்லை. தேமுதிகவிற்கு 13 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என அதிமுக பிடிவாதமாக கூறியது;
இறுதியாக 18 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டோம். விரும்பும் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி கூறியதால், கூட்டணியில் இருந்து வெளியேறினோம்' எனக் கூறினார்.
14:01 March 15
கோவில்பட்டியில் டிடிவி வேட்புமனு தாக்கல்
அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
13:16 March 15
முதலமைச்சர் வேட்புமனு தாக்கல்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, 7ஆவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
13:10 March 15
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல்!
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
12:46 March 15
தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் வேட்புமனு தாக்கல்!
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், வேட்புமனு தாக்கல் செய்தார்.
12:38 March 15
வேட்புமனு தாக்கல் செய்த திமுக தலைவர்
சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்புமனு தாக்கல் செய்தார்.
12:27 March 15
ஆலங்குளத்தில் களமிறங்கும் பனங்காட்டுப்படை!
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பில் போட்டியிட ஹரி நாடார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
12:16 March 15
தேர்தல் களத்தில் சகாயம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் சகாயம் அறிவித்துள்ளார். கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து சகாயம் அரசியல் பேரவை சார்பில் மாணிக்கம் போட்டியிடுகிறார்.
12:16 March 15
மநீம துணைத் தலைவர் வேட்புமனு தாக்கல்!
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
10:12 March 15
தேர்தல் முதன்மைத் தகவல்கள்: அமமுக 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.