ETV Bharat / elections

'பாஜகவுக்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டு சரித்திரத்தை மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்கு!'

பாஜகவிற்குச் செலுத்தும் வாக்கு என்பது 100 ஆண்டுகள் சரித்திரத்தை நாம் மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்காகத்தான் இருக்கும் என மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

ex finance minister P Chidambaram
ex finance minister P Chidambaram
author img

By

Published : Apr 1, 2021, 11:02 AM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் செல்வப்பெருந்தகையை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் திமுக மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தேர்தல் வந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கைச்சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். வாக்களிக்க வேண்டும் எனக் கேட்க வந்துள்ளேன்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் கேள்விப்பட்டது கிடையாது. கூவத்தூரில் சேர்ந்தார்கள் முதலமைச்சராக வந்துவிட்டார். தேர்தல் நேரத்தில் என்ன செய்தோம் என்று கூறிவிட்டு ஆளும் கட்சி வாக்குச் சேகரிக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறி வாக்குச் சேகரிக்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளில் கடன்தான் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 66 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. அடுத்து ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடனாக உயரும். ஒவ்வொரு குடிமகன் மீதும் 60 ஆயிரம் ரூபாய் கடன் வைத்துவிட்டுப் போகிறார்கள்.

சனாதன தர்மம் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது. பாஜகவிற்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டுகள் சரித்திரத்தை மறந்துவிட்டு போடுகின்ற வாக்கு. நிதி ஆதாரத்தை நம்மால் தேட முடியும். நிதி ஆதாரமும், நிர்வாகத் திறமையும் கூடி வரும்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

வேளாண் பயிர்க்கடன்களை ரத்துசெய்வதாகக் கூறினார். வேளாண் பயிர்க்கடன் ரூ.12,110 கோடி எப்படி ரத்துசெய்ய முடியும். ஐந்தாயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கி உள்ளார்கள். யார் ஒப்புதல் தருவார்கள், மீதமுள்ள தொகையை யார் தருவார்கள். இந்தக் கடன் ரத்து ஆகாது திமுக ஆட்சி வந்துதான் ரத்துசெய்யும்.

தமிழ்நாட்டுக்கு, தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பவர்கள்தான் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ் மீது இந்தி என்ற குரங்கு வந்து அமர்ந்துவிடும். வட நாடு கலவர பூமியாக மாறி உள்ளது. தமிழ்நாடு கலவர பூமியாக மாறக்கூடாது என்பதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.