ETV Bharat / elections

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 3.89 லட்சம் - திருச்சி செய்திகள்

மணப்பாறை அருகே பறக்கும் படை வாகன சோதனையில் எண்ணெய் நிறுவன ஊழியரிடம் இருந்து 3.89 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

election flying squad recovered
election flying squad recovered
author img

By

Published : Mar 18, 2021, 1:50 PM IST

திருச்சிராப்பள்ளி: மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஞானசுந்தரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எண்ணெய் நிறுவனத்தின் சரக்கு வேனை நிறுத்திச் சோதனையிட்டபோது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் மகேஸ்வரன் (42) உரிய ஆவணமின்றி மூன்று லட்சத்து 89ஆயிரத்து 51 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பறிமுதல் செய்த பணத்தை வட்டாட்சியரும், உதவித் தேர்தல் அலுவலருமான எம்.லஜபதிராஜிடம் ஒப்படைத்தனர். மகேஸ்வரன் விற்பனைக்கான ஆவணங்கள் வைத்திருந்தபோதும், அவை கையிலிருந்த ரொக்கப் பணத்திற்கானவை அல்ல என உதவி தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.