செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செங்கல்பட்டு அனுமந்த புத்தேரியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பனையூர் மு.பாபு, பனையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
இதையடுத்து, மாமல்லபுரத்தில் அமமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எம். கோதண்டபாணி பொது மக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்குச்சாவடி எண் 27ல் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்குச்சாவடியில் கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்த இயந்திரத்தில் கோளாறு!