ETV Bharat / crime

குடிக்கப் பணம் இல்லாததால் கொலை செய்தேன்; மூதாட்டியை கொலை செய்த இளைஞர் கைது

மது குடிக்கப் பணம் இல்லாததால் மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்து அவரை கொலை செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.

குடிக்க பணம் இல்லாததால் கொலை செய்தேன்; மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது

author img

By

Published : Dec 20, 2022, 7:21 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியைச் சேர்ந்தவர், எஸ்தர் (51). இவர் கடந்த மே மாதம் 26-ம் தேதியிலிருந்து மாயமானதாக கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி அவரது மகள் ஏஞ்சல் (29) சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது சிவப்பு ஜாக்கெட்டும், சந்தனகலர் புடவை மற்றும் அதன் அருகில் கருப்புநிற ஹேண்ட் பேக்-ல் வீட்டின் சாவியும் இருந்தது. எனவே, சடலமாக கிடந்தது காணாமல் போன எஸ்தராக இருக்கும் என சந்தேகித்த போலீசார் எஸ்தரின் மகள் ஏஞ்சலை அழைத்துச்சென்று காட்டியபோது, அங்கு சடலமாக இருந்தது தன் தாய் எஸ்தர் தான் என அவர் அடையாளம் காட்டினார்.

பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எஸ்தர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் எஸ்தரின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் பயன்படுத்திய செல்போனை தற்போது வேறு ஒருவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. எனவே, செல்போனை பயன்படுத்தி வரும் நபர் தான் எஸ்தரை கொலை செய்திருப்பார் என சந்தேகித்த போலீசார் செல்போனை பயன்படுத்தி வந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், மதுரபாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தான், தனக்கு செல்போனை கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து லோகநாதனை போலீசார் தேடிவந்த நிலையில் அகரம்தென் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு அருகே நடந்து வந்து கொண்டிருந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், சம்பவத்தன்று தான் குடித்துவிட்டு போதையில் தனது வீட்டிற்கு கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று, பூ பறித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மது அருந்துவதற்குப் பணம் இல்லாததால் தான் அப்பெண்மணி கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்-ஐ பறிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது அப்பெண்மணி சத்தம் போடவே தான் அப்பெண்மணியை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்துவிட்டு அவரிடம் இருந்த செல்போன் ஒன்றையும், அவரது ஹேண்ட் பேக்-ல் இருந்த ரூபாய் 700-யும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நான்காம் வகுப்பு மாணவனை மண்வெட்டியால் அடித்து கொன்ற ஆசிரியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.