திருவொற்றியூர் : சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நாயுடு முதல் தெருவை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி அம்மாயி (72). வேலு, கடந்த 20ஆம் தேதி அதிகாலை தேநீர் வாங்க கடைக்கு சென்றபோது அம்மாயி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்மல் அம்மாயி அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகையை பறித்து கொண்டும், இரண்டு செல்போன்களை பிடுங்கிக் கொண்டும் தப்பித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அம்மாயியிடம் நகையை பறித்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது திருவொற்றியூர் மேட்டு தெரு வை சேர்ந்த வசந்த் என்கிற பர்மா(21) மற்றும் 3 சிறுவர்கள் எனத் தெரியவந்தது.
![woman suicide attempt at Tiruvottiyur police station in Chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13698022_833_13698022_1637510815178.png)
இதையடுத்து உடனடியாக வசந்த் மற்றும் 3 சிறுவர்களை திருவொற்றியூர் காவலர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ஒன்றரை சவரன் தங்க செயினையும், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்றிரவு திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தன் கையை தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேவியின் தற்கொலை முயற்சி தொடர்பாகவும் திருவொற்றியூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மருமகனுடன் திருமணத்தை மீறிய உறவு.. மாமியாரின் கொடூரச்செயல்...