திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த 927 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த ராணி (56) மன விரக்தியின் காரணமாக வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயை துணியால் அணைத்தும், தண்ணீரை பீச்சி அடித்தும் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த சிப்காட் காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.