சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது எழுந்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க ஆறு பேர் கொண்ட விசாகா குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது எழுந்துள்ள பாலியல் புகாரை விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுனந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைக் குழுவில் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐ.பி.எஸ் அலுவலர் அருண், டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி தலைமை நிர்வாக அலுவலர் ரமேஷ் பாபு, லொரெட்டா ஜோனா இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.