ETV Bharat / crime

அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு - சிசிடிவியைக் கொண்டு விசாரணை - Karur Bike theft CCTV

கரூரில் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை, சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Aug 26, 2021, 5:45 PM IST

கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் பாதை, வளையல்காரன் தெரு, நரசிம்மபுரம் ஆகியப் பகுதிகளில் இரவு நேரத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராயல் என்ஃபீல்டு, யமஹா, டியோ ஆகிய இருசக்கர வாகனங்களை அடுத்தடுத்து திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தப் புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றவரைத் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனியாக வந்து இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வதாக பொதுமக்களிடையே செய்தி வெளியாகிய நிலையில் கரூர் நகர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: வடிவேல் பாணியில் புது ரூட்டெடுத்து திருடிய கேரள பட்டதாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.