ETV Bharat / crime

மும்பை ஹன்சா ஹெரிட்டேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் தீ - காயமடைந்த இருவர் உயிரிழப்பு!

மும்பை ஹன்சா ஹெரிட்டேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Nov 7, 2021, 10:55 PM IST

Hansa Heritage building fire, Mumbai building fire, Fire in Mumbai, மும்பை, ஹன்சா ஹெரிட்டேஷ், அடுக்குமாடி குடியிருப்பில் தீ, மும்பை தீ
மும்பை ஹன்சா ஹெரிட்டேஷ் அடுக்குமாடி குடியிருப்பில் தீ

மும்பை (மகாராஷ்டிரா): அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹன்சா ஹெரிட்டேஜ் எனும் 15 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென தீ பிடித்தது. அந்த வீட்டில் மொத்தம் 7 நபர்கள் இருந்துள்ளனர்.

கட்டுக்கடங்காமல் மளமளவென பரவிய தீயினால், இருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட தீயணைப்புத் துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே காயமடைந்த பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை ஹன்சா ஹெரிட்டேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் தீ

தீ முழுவதும் அணைக்கப்பட்டு விட்டதாகவும், வீட்டை குளிர்விக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தீயணைப்புத் துறையின் உயர் அலுவலர் சம்பார்க் கராடே தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.