சென்னை: சட்ட விரோதமாக ரூ.130 விலையுள்ள மதுபான பாட்டிலை ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், ரூ.150 விலை கொண்ட பீரை ரூ.500 முதல் ரூ600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படாது என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளின்போது, இதைப் பயன்படுத்தி ஒரு சிலர் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வைத்திருந்து, தற்போது சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
திருவேற்காடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக, காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான காவலர்கள், அன்பு நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கையும், களவுமாகப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி(20), மாரியப்பன் (29) எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 50 பீர் பாட்டில்கள் என, மொத்தம் 250 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.130 விலை கொண்ட மதுபானத்தை ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், ரூ.150 விலை கொண்ட பீர் மதுபானத்தை ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: பேருந்துக்காக காத்திருந்த முதியவர் மீது பேருந்து மோதி விபத்து