ETV Bharat / crime

கடனை திருப்பித் தர காலம் தாழ்த்திய நபர் வெட்டிக் கொலை: இருவர் கைது!

கிருஷ்ணகிரி: ஒசூரில் வாங்கிய பணத்தை திருப்பித் தர காலம் தாழ்த்தி வந்த நபரை கொலை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Two accused arrested for murder case
Accused arrested
author img

By

Published : Jun 15, 2021, 9:44 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி மத்திகிரி அன்னை நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவர் சிப்காட்டில் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் பண வசூலிப்பாளராக பணியாற்றி வரும் ரகுராம் (26) என்பவரிடம் பாலாஜி 30 லட்சம் ரூபாய் பணம் பெற்று நீண்ட நாள்களாக கரோனாவை காரணம் காட்டி இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

அண்மையில் பாலாஜி வழங்கிய காசோலை வங்கியில் செலுத்தியபோது பணமில்லை எனக் கூறி திருப்பி வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரகுராம், எலக்ட்ரிகல் கடையில் வேலை பார்த்து வரும் அவரது நண்பர் மோகன் (26) முன்னிலையில் பணம் கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஜூன் 12 ஆம் தேதி வசந்த்நகரிலுள்ள தனது இல்லத்திற்கு பாலாஜியை அழைத்துள்ளனர்.

பின்னர், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு கை கலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரகுராம், மோகன் ஆகிய இருவரும் பாலாஜியை அரிவாளால் தலை, கழுத்து, இடது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி சுருண்டு விழுந்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த பாலாஜியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 15) தலைமறைவாகி இருந்த குற்றவாளி ரகுராம், அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.